மீண்டும் வெடிக்கும் எரிமலை – உயிரிழப்பு 72 ஆக உயர்வு!!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாட்டமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின.

ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது.

சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா வானூர்தி நிலையம் உடனடியாக மூடப்பட்டது.

கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று மீட்பு பணியின் போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close