side Add

முல்லைத்தீவில் பல உதவித் திட்டங்களை வழங்கினார் சந்திரிகா!!

இலங்கையின் முன்னாள் அரச தலைவரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவருமாகிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று முல்லைத்தீவுக்கு வருகை தந்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் உட்பட செயலக அலுவலர்கள் அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும், வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருள்கள் வழங்கல் நிகழ்விலும், பிரதேச செயலகங்களுக்கு தண்ணீர் பௌசர்களைக் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

You might also like