மெய்ப்படுமா உருகுவேக்கு?

உரு­குவே அணி உல­கக் கிண்­ணத் தொட­ருக்கு 13ஆவது முறை­யா­கத் தகுதி பெற்­றுள்­ளது. 1930ஆம் ஆண்­டில் உல­கக் கிண்­ணத்தை வென்ற முதல் அணி என்ற சாத­னையைப் படைத்த உரு­குவே, 1950ஆம் ஆண்­டில் இரண்­டா­வது முறை­யா­கக் கிண்­ணம் வென்­றி­ருந்­தது.

அதன் பின்­னர் கிண்­ணத்தை வெல்ல 68 ஆண்­டு­க­ளா­கப் போராடி வரு­கி­றது. எனி­னும் அந்த அணி கடந்த 10 ஆண்­டு­க­ளில் பயிற்­சி­யா­ளர் ஆஸ்­கார் தப­ரேஸ் வழி­காட்­டு­த­லில் ஒரு நிலை­யான மற்­றும் வள­மான காலக்­கட்­டத்­துக்­குள் நுழை ந்­துள்­ளது.

நான் அவுட் சுற்­றுக்­குச் செல்ல
மிக இல­கு­வான வாய்ப்­புள்­ளது

ரஷ்ய உல­கக் கிண்­ணத் தொட­ரில் உரு­குவே அணி எளி­தான ‘ஏ’ பிரி­வில் இடம்­பி­டித்­துள்­ளது. இதே பிரி­வில் தொடரை நடத்­தும் ரஷ்யா, எகிப்து, சவூதி அரே­பியா ஆகிய அணி­க­ளும் உள்­ளன.

நாக் அவுட் சுற்­றுக்கு நுழை­வ­தில் உரு­குவே அணிக்கு எந்­த­வித சிர­ம­மும் இருக்­காது. நட்­சத்­திர வீரர்­க­ளான லூயிஸ் சுவா­ரஸ், எடி­சன் கவானி, டிகோ காட்­வின், பெர்­னாண்டோ முஸ்­லெரா ஆகி­யோர் அணி­யின் தூண்­க­ளாக உள்­ள­னர்.

தகு­திச் சுற்­றில் உரு­குவே அணி 9 வெற்றி, 4 சம­நிலை, 5 தோல்­வி­களை பதிவு செய்­தி­ருந்­தது. உரு­குவே அணி எப்­போ­தும் களத்­தில் 4-–4-–2 என்ற வடி­வத்­தி­லேயே வீரர்­களை கள­மி­றக்­கும். இதில் சுவா­ரெஸ், கவானி சரி­யான கல­வை­யாக இடம்­பெ­று­வார்­கள். அந்த அணிக்கு நடு­க­ளம்­தான் சற்று பின்­ன­டை­வாக இருக்­கக்­கூ­டும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

எனி­னும் பந்தை விரை­வாக கடத்­திச் செல்­லும் திறன், சிறந்த தடுப்­பாட்­டம் ஆகி­ய­வற்­றால் மற்ற விட­ யங்­க­ளைச் சரி செய்­து­கொள்ள முடி­யும் என நம்­பிக்­கை­யைக் கொண்­டுள்­ளது உரு­குவே அணி.

கவானி, லூயிஸ் சுவா­ரஸ்
கூட்­ட­ணி­யில் நம்­பிக்கை

அந்த அணி­யின் கோல் அடிக்­கும் இயந்­தி­ர­மாக வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர் கவானி. தொழில்­முறை ஆட்­டங்­க­ளில் பரிஸ் செயின்ட் ஜெர்­மன் அணிக்­காக விளை­யாடி வரும் கவானி, உல­கக் கிண்­ணத் தொட­ருக்­கான தகுதிச்சுற்று ஆட்­டங் களில் 10 கோல்­கள் அடித்­தி­ருந்­தார்.

மற்­றொரு நட்­சத்­திர வீர­ரான சுவா­ரெஸ் கோல்­கள் அடிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக் கொடுப்­ப­தில் வல்­ல­வர். பார்­சி­லோனா அணி­யில் மெஸ்­ஸிக்கு உறு­து­ணை­யாக இருந்து வரும் சுவா­ரெஸ் உல­கக் கிண்­ணத் தொட­ருக்­கான தகு­திச் சுற்­றில் 7 கோல்­கள் அடிக்க உத­வி­பு­ரிந்­துள்­ளார்.

உல­கின் தலை சிறந்த வீரர்­க­ளாக கருப்­ப­டும் கவா­னி­யும், சுவா­ரெ­ஸூம் வலு­வான திறனை களத்­தில் வெளிப்­ப­டுத்­தும் பட்­சத்­தில் எதி­ர­ணி­யின் தடுப்பு வியூ­கங்­கள் குறித்து உரு­குவே அணி அதி­கம் பயம் கொள்­ளத் தேவை இருக்­காது.

உரு­குவே அணிக்­காக சுவா­ரெஸ் 97 ஆட்­டங்­க­ளில் 50 கோல்­க­ளும், கவானி 100 ஆட்­டங்­க­ளில் 42 கோல்­க­ளும் அடித்­துள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதில் சுவா­ரெஸ் உல­கக் கிண்­ணத் தொட­ரில் 5 கோல்­கள் அடித்­துள்­ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close