மேலெழத் துடிக்கும் கிளாலி!!

கடமை அறி­யோம் தொழி­ல­றி­யோம் கட்­டென்­ப­தனை வெட்­டென்­போம் மடமை சிறுமை துன்­பம் பொய் வருத்­தம் நோவு மற்­றி­வை­போல் கடமை நினை­வுந் தொலைந்­திங்கு களி­யுற்று என்று வாழ்­கு­லமே’ என்ற கவி­வ­ரி­களை பார­தி­யார் ஏன் எழு­தி­னார் என்று எண்­ணு­கி­றேன்.

பசுமை கொழிக்­கும் குட்­டிக் கிரா­மமே கிளாலி. மா, பலா, தென்னை, நெல், மரக்­க­றித் தோட்­டம், கடல் என்று வளங்­க­ளால் செழித்­துள்ள நீதான் அன்று அனை­வ­ருக்­கும் அடைக்­க­லம் கொடுத்­தாய். அமெ­ரிக்கா ஏன் ஐரோப்­பா­வின் அக­ரா­தி­யில் உன் பெயர் பொறிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அந்­தக்­கா­லப் போரின் கடை­சிப் பய­ணப் பாதையே நீ தான். உன் ஊருக்கு வர ஒரு ஒழுங்­கான பாதையே இல்­லையே, ஒரு மருத்­து­வ­மனை கூட இல்­லையே, ஒரு நூல­கம் இல்­லையே, உருப்­ப­டி­யான கடை கூட இல்­லையே?
நூறு வரு­டத்­துக்­குப் பின்பு இப்­போது தான் இருட்­டி­லி­ருந்து வெளியே வந்­துள்­ளாயே? மின்­சா­ரம் மின்­னு­கி­றது. அந்த ஊர் மக்­கள் என்ன பாவம் செய்­தார்­கள்?

ஏறக்­கு­றை­யப் பத்­துக் குருக்­கள், கன்­னி­ய­ரை­யும் பல கல்­வி­மான்­க­ளை­யும் கொண்ட குட்­டிக்­கி­ரா­மமே கிளாலி.

பிலிப்­பை­யா­வால் அன்று அதி­ப­ராக ஆரம்­பித்து வைத்த ஆரம்­பப் பாட­சாலை இன்று சிறிது விரி­வாக்­க ப்­பட்­டி­ ருப்­பது மகிழ்­வைத் தந்­தா­லும் அந்த வறு­மைப்­பட்ட சிறார்­கள் அடுத்த நகர வாழ்­வைத் தேடி நகர வழி­யில்­லா­மலே வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

கல்­வி­யைக் கற்­றா­லும் போதிய கல்வி வளங்­க­ளைப் பெற கற்­ற­வர்­க­ளின் பங்­க­ளிப்­புப் போதா­மை­யும் கவ­லை­ய­ளிக்­கி­றது. போக்­கு­வ­ரத்­துக்கு ஒரு நாளையே செல­வி­டு­கி­றார்­களே. ஒரு அவ­சர மருத்­துவ தேவை­யைப்­பெற மிதி வண்­டி­யை­யும் உந்­து­ரு­ளி­யை­யுமே நம்பி வாழ்­கி­றார்­கள். இரண்டு மணி நேரத்­தின் பின்­பு­தான் அது­வும் சாத்­தி­ய­மா­குமே!

அன்று 1966ஆம் ஆண்டு கால­கட்­டத்­தில் மூன்று நேர இலங்­கைப் போக்­கு­வ­ரத்து பேருந்­துச் சேவை மட்­டுமே காணப்­பட்­டது. அப்­போது உந்­து­ரு­ளியே காணப்­ப­ட­வில்லை. அந்­தக் காலத்­தில் நான­றிய ஒரு மகி­ழுந்து மட்­டுமே இருந்­தது. எமது காலத்­தில் அந்த வாக­னத்­தி­லேயே நாம் போக்­கு­வ­ரத்தை மேற்­கொண்­டோம்.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு
முன்­பான எனது அனு­ப­வம்!
கிளா­லி­யில் உந்­து­ரு­ளி­யில் பய­ணம் செய்­த­போது ஏற்­பட்ட விபத்­தால் எனது கை முறிந்­தது. கார­ணம் அங்கு வீதி என்ற பெய­ரில் விதி வரைந்த இரண்டு கோடு­க­ளே­தான் காணப்­ப­டு­கி­ன்றன. அன்று மருத்­துவ வச­தி­யைப் பெற­மு­டி­யா­மல் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னையை அடைந்­தேன். ஏறத்­தாழ ஐந்து மணி நேரம் சென்­றது. அது­வும் உந்­து­ரு­ளி­யி­லும் பின்பு அவ­சர சேவைப் பிரி­வை­யும் அழைத்­துமே இது சாத்­தி­ய­மா­னது. பண­மி­ருந்­த­தாலே இவ்­வாறு பய­ணித்­தேன். ஏழை­கள் என்­ன­தான் செய்ய முடி­யும்.

‘கண்­கள் குள­மா­கு­கின்­றன, மனமோ கொதிக்­கும் குழம்­பைப்­போல குமு­கு­கி­றதே! விஞ்­ஞா­னத்­தில் உல­கம் எங்கோ சென்று விட்­டது. இவர்­களோ எங்கோ ஒரு கரை­யில் நீந்­தி­வர வழி தேடா­மல் அது­தான் வாழ்­வென்­றெண்ணி வாழ்­கி­றார்­களே? இன்­று­வரை சில மாற்­றங் காணப்­பட்­டா­லும், பல­வற்­றுக்கு வழி தேட­வில்­லையே என்­பது வேடிக்­கையோ வினோ­தமோ என்­ன­வென்று எண்ண?

கட­வுளே இவர்­களை நீ தான் காப்­பாற்ற வேண்­டும். நீங்­கள் ஒவ்­வொ­ரும் அந்த ஏழைக்­கி­ராம மக்­க­ளுக்கு மிக அத்­தி­யா­வ­சி­யத் தேவை­யான பாதை­யைச் சீர­மைக்க வழி இல்­லா­மலே அந்த மக்­கள் எவ்­வ­ளவு அவஸ்­தைப்­பட்­டி­ருந்­தார்­கள் என்­பதை விப­ரிக்க ஒரு வார்த்தை அக­ரா­தி­யிலே அமைந்­தி­ருக்­க­வில்லை.

ஆனா­லும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ர­னால் அங்­குள்ள வீதி ஒன்று திருத்­தப்­ப­டு­கின்­றது. அது விரை­வில் நடந்து முடி­ய­வேண்­டும்.

திரேஸ் மரி­ய­தாஸ்

You might also like