மைத்­தி­ரி­யின்- பொய்­யும் புரட்­டும்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, மறைந்த சோபித தேர­ரின் பிறந்த தின நிகழ்­வில் ஆற்­றிய உரை, கொழும்­பில் மற்­றொரு அர­சி­யல் பூகம்­பத்­துக்கு வித்­திட்­டி­ருக்­கின்­றது. இலங்கை வர­லாற்­றில் முதல் தட­வை­யாக தேசி­யக் கட்­சி­கள் இரண்­டும் இணைந்து ஆட்சி அமைத்­துள்­ளன என்று அடிக்­கடி பெரு­மை­யாக இரு கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் சொல்­லிக் கொண்­டா­லும், இரண்டு கட்­சி­க­ளுக்­கு இடை­யே­யும் பெரும் புகைச்­சல் இருந்­தமை அவ்­வப்­போது வெளித் தெரிந்­தது.

கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர், புகைச்­சல், புய­லா­கவே மாறி­விட்­டது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் உரை­யும் அதன் வெளிப்­பா­டு­தான்.

‘’100 நாள் வேலைத் திட்­டத்­தால் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்க முடி­யாது போனது. இத­னைத் தயா­ரித்­த­வர்­கள் யார் எனத் தெரி­யாது. அதுவே மிகப்­பெ­ரிய முட்­டாள்­த­னம். உண்­மை­யில் நான் பத­வி­யேற்ற அன்­றைய தினம் இரவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கக்­கூ­டி­ய­வாறு அந்­தத் திட்­டத்­தினை தயா­ரித்­தி­ருக்க வேண்­டும் என்று நான் அவர்­க­ளுக்கு கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அன்றே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து தேர்­தலை நடத்­தி­யி­ருக்க வேண்­டும்’’ என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால உரை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லின்­போது, நூறு நாள் வேலைத் திட்­டத்தை முன்­வைத்­துத்­தான் அவ­ரது பரப்­புரை நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அரச தலை­வர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­ய­வ­ருக்கே தெரி­யா­மல்­தான், அவ­ரது தேர்­தல் பரப்­பு­ரை­யின் முக்­கிய கோச­மாக இடம்­பி­டித்த நூறு நாள் வேலைத் திட்­டம் இருந்­தது என்­றால், அதனை அப்­போதே அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாமே ? அது முட்­டாள்த் த­ன­மாகத் தயா­ரிக்­கப்­பட்­டது என்­றால், அதை நிரா­க­ரித்­தி­ருக்­க­லாம். இவை எவற்­றை­யும் தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பால ஏன் செய்­ய­வில்லை ? அரச தலை­வர் பதவி மீதான ஆசை­தான் அதைத் தடுத்­தது என்று எண்­ணிக் கொள்­வ­தில் தவ­றில்லை.

தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்த மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு உலங்கு வானூர்­தி­யில் அம்­பாந்­தோட்டை செல்ல யார் அனு­மதி வழங்­கி­னார்­கள் என்­றும் அரச தலை­வர் மைத்­திரி தனது உரை­யில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.
2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் பொதுக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, ‘’அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த தோல்­வி­ய­டைந்த பின்­னர் அவர் தங்­காலை செல்­வ­தற்­காக இரு உலங்கு வானூர்­தி­களை நான் கொடுத்­தேன். தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்த பின்­னர் அரச உலங்கு வானூர்­தி­யில் முன்­னாள் தலை­வர் ஒரு­வர் வீடு செல்ல அனு­ம­தித்­தது எந்த நாட்­டி­லா­வது நடந்­துள்­ளதா?. ஆனால் நான் கொடுத்­தேன்’’ என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

அரச தலை­வர் தெரி­வித்த இந்த இரண்டு கருத்­துக்­க­ளில் ஏதா­வது ஒன்­று­தான் உண்­மை­யாக இருக்க வேண்­டும். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பா­கிச் செல்­லும் கடுப்­பில், ஐக்­கிய தேசி­யக் கட்சி மீது சீறிச் சினப்­ப­தற்­காக, மைத்­தி­ரி­பால சிறி­சேன பொய்­களை அடுக்கி விட்­டுள்­ளார்.

விசா­ர­ணை­கள் தாம­த­ம­டை­வது தொடர்­பி­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உரை­யில் விச­னம் தெரி­வித்­தி­ருந்­தார். உண்­மை­யில், அரச தலை­வ­ருக்கு விசா­ர­ணை­கள் துரி­த­மாக நடக்­க­வேண்­டும் என்ற விருப்­பம், – இத­ய­சுத்தி இருந்­தி­ருக்­கு­மா­னால், சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ராக பொன்­சே­காவை நிய­மித்­தி­ருப்­பார். அதற்­கான வாய்ப்பு இரண்டு தட­வை­கள் வந்­த­போ­தும், மைத்­தி­ரி­பால நேர­டி­யா­கத் தலை­யிட்டு, அத­னைத் தடுத்­தி­ருந்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­லி­ருந்து, மகிந்த அணி­யு­டன் ஒட்­டி­யுள்­ள­வர்­கள் மீதான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­குப் பதி­லாக மைத்­திரி தாம­தப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். அவர்­கள் மீள­வும் தன்­னு­டன் வந்து சேர்­வார்­கள் என்ற நப்­பா­சை­யில் அவர் அதனை முன்­னெ­டுத்­தி­ருந்­தார். மறு­பு­றம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­காக, ராஜ­பக்ச அன்கோ மீதான விசா­ர­ணை­களை ஆமை வேகத்­தில் நகர்த்­தச் செய்­தார்.

இரண்டு தலை­வர்­க­ளுமே தங்­க­ளின் அர­சி­யல் நலன்­க­ளுக்­கா­கச் செயற்­பட்­டு­விட்டு, இப்­போது ஒரு தலை­வர் மற்­றைய தலை­வரை நோக்­கிப் பந்தை எறிந்து எது­வுமே தெரி­யாத அப்­பா­விப் பிள்ளை போன்று இருக்­கின்­றார்.

அர­சி­யல் என்­றாலே பொய்­யும் புரட்­டும்­தான் என்­பார்­கள். இதற்கு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் விதி விலக்­கில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close