யாழ்.சட்­ட­மீ­றல்­கள் குறித்து ஆதா­ரங்­கள் கொடுத்­தும் நட­வ­டிக்கை இல்லை

பொலி­ஸார் மீது அதி­கா­ரி­கள் குற்­றச்­சாட்டு

யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெ­றும் சட்­ட­மீ­றல்­கள் தொடர்­பில் ஆதா­ரங்­க­ளு­டன் பொலி­ஸா­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­தி­யும் பொலி­ஸார் அவை தொடர்­பில் உரிய நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தில்­லை் என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­வி­டம் சுட்­டிக்­காட்­டி­னர் பிர­தேச செய­லர்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் தற்­போது அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள், போதைப் பொருள் கடத்­தல்­கள் போன்ற சட்­ட­மீ­றல் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான சிறப்­புக் கூட்­டம் நேற்று ஆளு­நர் செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போது அதி­கா­ரி­கள் இந்த விட­யத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னர்.

யாழ்ப்­பா­ணத்­தில் குறிப்­பா­கத் தென்­ம­ராட்சி, கெற்­பேலி, தனங்­கி­ளப்பு ஆகிய இடங்­க­ளில் தொடர்ச்­சி­யாக கள­வாக மணல் அகழ்வு நடக்­கின்­றது. குடி­யி­ருப்­பா­ளர்­கள் அற்ற வீடு­க­ளில் கலா­சார பிறழ்­வான சம்­ப­வங்­க­ளும், சட்­ட­மீ­றல்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. நாவற்­கு­ழியை அண்­டிய கரை­யோ­ரங்­க­ளில் கஞ்சா பாவனை அதி­க­ரித்­துள்­ளது.

காரை­ந­கர், புங்­கு­டு­தீவு, அன­லை­தீவு ஆகிய இடங்­க­ளில் இறைச்­சிக்­காக மாடு­கள் கடத்­தப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்கு உடந்­தை­யாக இருப்­ப­வர்­கள் தொடர்­பாக முறை­பா­டுள் செய்­யப்­பட்­டும் எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை என்று அதி­கா­ரி­கள் ஆளு­ந­ரி­டம் சுட்­டிக்­காட்­டி­னர்.

வன்­முறை மற்­றும் சமூக சீர­ழி­வு­க­ளைத் தடுப்­ப­தற்­குச் சமூ­கப் பிர­தி­நி­தி­க­ளை­யும், மதத் தலை­வர்­க­ளை­யும், அதி­கா­ரி­க­ளை­யும், சட்­டத் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளை­யும், பாது­காப்­புத் தரப்­பி­ன­ரை­யும் ஒன்­றி­ணைத்­துக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்க வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது என்று ஆளு­நர் குரே தெரி­வித்­தார்.

இந்து அற­நெ­றிப் பாட­சா­லை­களை அதி­க­ள­வில் தோற்­று­வித்து அற­நெ­றி­க­ளைக் குழந்­தை­க­ளுக்­குப் போதிக்­க­வேண்­டும். அதன்­மூ­லம் தவ­றான பழக்க வழக்­கங்­க­ளைக் குறைக்­க­லாம். பௌத்த, கிறிஸ்­தவ, முஸ்­லிம் மதங்­கள் தத்­த­மது சமய நெறி­களை அற­நெ­றிப் பாட­சா­லை­கள் ஊடா­கப் போதிக்­கும் நிலை­யில் இந்து சமய அற­நெ­றிப் பாட­சா­லை­கள் அவற்­றைப் போதிப்­ப­தில் வீழ்ச்சி கண்­டுள்­ளன என்­றும் வடக்கு ஆளு­நர் குறிப்­பிட்­டார்.

கூட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­லர், பொலிஸ், இரா­ணுவ அதி­கா­ரி­கள், மதத் தலை­வர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள், பிர­தேச செய­லா­ளர்­கள், அதி­கா­ரி­கள் எனப் பல தரப்­பி­ன­ரும் கலந்து கொண்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close