வன்முறைகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

 

யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குள்ளமனிதர்களின் அட்டகாசங்களுக்குச் சர்வமதப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் அக்கறையுடன் செயற்படவேண்டும் என்றும் பேரவை கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

வன்முறைகளால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. மக்கள் அச்சத்தில் பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

மாவட்டத்தில் மீண்டும் அமைதியான சூழலை உருவாக்கவும் மக்கள் மீள இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் அனைவரும் பாடுபட வேண்டியது அவசியம். இந்த இக்கட்டான நிலையில் அமைதி நிலைமை ஏற்படுவதற்குப் பொறுப்புடைய பொலிஸார் இந்தவிடயத்தில் மிகவும் முனைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்று பேரவை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close