வர­லாற்­றுப் பாடம்!!

வர­லாற்று முக்­கி­யத்­து­வம் மிக்க சந்­திப்பு ஒன்று இன்று நடை­பெ­று­கி­றது. அமெ­ரிக்க அரச தலை வர் ட்ரம்ப் – வட­கொ­ரிய அரச தலைவர் கிம் ஜோங் உன் இரு­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பே இன்று நடை­பெ­று­கி­றது. சிங்­கப்­பூ­ரில் உச்­சக்­கட்­டப் பாது­காப்­புக்கு மத்­தி­யில் உள்­நாட்டு நேரப்­படி காலை 9 மணி­ய­ள­வில் (இலங்கை நேரப்­படி காலை 6.30 மணி) இரு­வ­ரும் சந்­தித்­துப் பேச்சு நடத்­து­கின்­ற­னர்.

அணு­வா­யுத வல்­ல­மை­யுள்ள இந்த இரண்டு நாடு­க­ளின் தலை­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான இந்­தச் சந்­திப்பு வெற்­றி­ய­ளிக்க வேண்­டும் என்­பதே பல­ரி­ன­தும் எதிர்­பார்ப்பு.

கொரி­யத் தீப­கற்­பப் போர் 1953ஆம் ஆண்டு முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னர் கொரிய நாடு­க­ளுக்கு இடையே தீராப்­பகை நில­வி­வந்­தது. தென்­கொ­ரியா சாம்­ப­ராக்­கப்­ப­டும், அதன் ஆத­ரவு நாடான அமெ­ரிக்கா தீக்­கி­ரை­யாக்­கப்­ப­டும் என்­றெல்­லாம் முழங்கி வந்­தார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்.

கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயும் ஏவு­க­ணைச் சோதனை, அணு­வா­யுதச் சோதனை என்­ப­வற்­றை­யும் கடந்த 2016, 2017ஆம் ஆண்­டு­க­ளில் வட­கொ­ரியா மிக அதி­க­ள­வில் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அமெ­ரிக்கா, ஜப்­பான், தென்­கொ­ரியா உள்­ளிட்ட பல நாடு­க­ளி­ன­தும் ஐக்­கிய நாடு­கள் சபை­யி­ன­தும் பொரு­ளா­தா­ரத் தடை­களை வட­கொ­ரியா வாங்­கிக் குவித்­தி­ருந்­தது.

மூன்­றாம் உல­கப்­போர் ஒன்று வெடிக்­கு­மா­னால் அதன் தோற்­று­வா­யாக கொரி­யத் தீப­கற்­பமே இருக்­கும் என்­கிற நிலைப்­பாடே இருந்­தது. இவை அனைத்­தை­யும் மாற்­றி­யுள்­ளது ஓர் ஒலிம்­பிக் தொடர்.
குளிர்­கால ஒலிம்­பிக் தொடர் இந்த வரு­டம் தென்­கொ­ரி­யா­வில் நடை­பெற்­றது. தென்­கொ­ரி­யா­வின் கடும் முயற்­சி­யின் பய­னாக வட­கொ­ரியா பங்­கெ­டுத்­தது.

இதை­ய­டுத்து கொரிய நாடு­கள் மீண்­டும் தமக்­குள் நட்­புப் பாராட்ட ஆரம்­பித்­தன. கொரிய அதி­பர்­க­ளின் சந்­திப்பு இரு நாடு­க­ளின் எல்­லை­யில் அமைந்­துள்ள அமை­திக் கிரா­ம­மான பான்­முன்­ஜி­யோ­மில் நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்பை அடுத்து அமெ­ரிக்க அரச தலைவர் ட்ரம்­பை­யும் சந்­திக்க விருப்­பம் தெரி­வித்­தார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன். இதை­ய­டுத்து இந்­தச் சந்­திப்பு நடை­பெ­று­கி­றது.

மூன்­றாம் உல­கப் போரின் தோற்­று­வா­யா­கக் கரு­தப்­பட்ட இரண்டு நாடு­கள் இன்று பேச்­சில் ஈடு­ப­டு­கின்­றன. ஆயு­தங்­க­ளால் பலப்­ப­ரீட்சை செய்­ய­வி­ருந்த நாடு­கள் இன்று அமை­திக்­கான பேச்­சில் ஈடு­ப­டு­கின்­றன. பாராட்­டப்­பட வேண்­டிய விட­ய­மிது. இதே மாற்­றம் ஏனைய நாடு­க­ளி­டையே நில­வும் பனிப் போர்­க­ளி­லும் ஏற்­பட வேண்­டும் என்­பதே பன்­னாட்டு ஆர்­வ­லர்­க­ளின் வேணவா.

ரஷ்யா – அமெ­ரிக்கா, இந்­தியா – சீனா, இந்­தியா – பாகிஸ்­தான், பாகிஸ்­தான் -– பங்­க­ளா­தேஷ், இஸ்­ரேல் – பலஸ்­தீ­னம், இஸ்­ரேல் -– ஈரான், ஈரான் – – அமெ­ரிக்கா, கட்­டார் – – சவூதி என ஆசியா, ஆபி­ரிக்கா, அரபு நாடு­கள், மத்­திய கிழக்கு, ஐரோப்­பியா என்று எங்­கு­பார்த்­தா­லும் போர் மேகம் சூழ்ந்­துள்­ளது.

அதி­லும் குறிப்­பாக மத்­திய கிழக்­கில் ஈரான், இஸ்­ரேல், பலஸ்­தீ­னம் ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான விவ­கா­ரம் நீறு­பூத்த நெருப்­பா­கவே உள்­ளது. அடுத்த உல­கப்­போ­ரின் தோற்­று­வாய் என்­கிற நிலைப்­பாடு அது. இத்­த­கைய போக்­கைக் கைவிட்டு நிபந்­த­னை­கள் அற்­ற­தும், ஆத்­மார்த்­த­மா­ன­து­மான பேச்சே அமை­திக்­குத் தீர்வு என்­பதை தலை­மை­கள் உண­ர­வேண்­டும்.

உலக நாடு­க­ளின் பொது அமைப்­பாக உள்ள ஐக்­கிய நாடு­கள் சபை இது விட­யத்­தில் காத்­தி­ர­மான நகர்­வு­களை மேற்­கொள்ள வேண்­டும். வெறும் கண்­டன அறிக்­கை­க­ளு­டன் தனது கட­மையை முடித்­துக் கொள்­ளும் பாணி­யைக் கைவிட்டு ஆக்­க­பூர்­வ­மா­னதை உரு­வாக்­கும் பாதையை ஐ.நா. அறிந்­து­கொள்ள வேண்­டும். அதற்கு வல்­ல­ரசு நாடு­கள் தத்­த­மது வீட்டோ அதி­கா­ரத்தை நியா­யத்­தின் பக்­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்ள முன்­வர வேண்­டும். சுருங்­கச் சொல்­லின், பேசி முடி­வெ­டுப்­ப­தைத் விடுத்து முடி­வெ­டுத்­து­விட்­டுப் பேசு­கின்ற போக்கு உல­குக்கே பெரும் ஆபத்து.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close