side Add

வவு­ண­தீ­வுச் சம்­ப­வம் இன­வா­தத்தை மீண்­டும் தூண்­டும் சதித்­திட்­டம்

நாடா­ளு­மன்­றில் கூட்­ட­மைப்பு குற்­றச்­சாட்டு

வவு­ண­தீ­வில் இடம்­பெற்ற சம்­ப­வம் நாட்­டில் மீண்­டும் இன­வா­தத்தை தூண்­டி­ வி­டும் சதித்­திட்­ட­மா­கவே நாங்­கள் பார்­கின்­றோம். அமை­தி­யா­க­வி­ருந்த மட்­டக்­க­ளப்பு இன்று அச்­சு­றுத்­த­லுக்­குள் தள்­ளப்­பட்­டுள்­ளது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஞா.சிறி­நே­சன் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றம் நேற்­றுப் புதன்­கி­ழமை சபா­நா­ய­கர் தலை­மை­யில் காலை 10.30 மணிக்கு கூடி­யது. நாட்­டின் அர­சி­யல் நெருக்­க­டி­கள் தொடர்­பில் உறுப்­பி­னர்­கள் தமது கருத்தை முன்­வைத்­தி­ருந்­த­னர். அத­னைத் தொடர்ந்து அர­சி­யல் நெருக்­க­டி­கள் தொடர்­பி­லான சபை ஒத்­தி­வைப்பு தீர்­மா­னத்தை மக்­கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­தி­ருந்­தது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

மகிந்­த­வைப் பத­வி­யி­லி­ருத்தி அவ­ருக்­குப் பெரும்­பான்­மை­யைத் திரட்­டு­வ­தற்­காக பணத்­தை­யும், பத­வி­க­ளை­யும் அள்ளி வீசி­னர். கூட்­ட­மைப்பு அதற்கு ஒரு போதும் அடி­ப­ணி­யாது. ஆனா­லும் எங்­க­ளி­லும் ஒரு­வர் விலை­போ­னார். அவ­ருக்கு இப்­போது என்ன கதி என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.

தமிழ் மக்­க­ளின் கணி­ச­மான வாக்­கு­க­ளைப் பெற்று பத­விக்கு வந்த மைத்­திரி, தமி­ழர் நலன்­சார்ந்து ஒரு சில விட­யங்­களை முன்­னெ­டுத்­தார். அவ­ரது பெயர் நோபல் பரி­சுக்கு பரிந்­து­ரைக்­கக் கூடி­ய­ள­வுக்கு பேசப்­பட்­டது.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்­குப் பின்­னர் எல்­லாம் தலை­கீ­ழாக மாறி­விட்­டது. தமிழ் மக்­க­ளி­டத்­தில் அவ­ருக்கு இருந்த நன்­ம­திப்பு காணா­மல் போய்­விட்­டது.

225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் இணைந்து ரணிலை தலைமை அமைச்­ச­ராக்­கச் சொன்­னா­லும் செய்­ய­மாட்­டேன் என்று சொல்­லு­ம­ள­வுக்கு மைத்­திரி சர்­வா­தி­கா­ரி­யா­கி­விட்­டார்.

அரச தலை­வர் தேர்­த­லின்­போது உயி­ரைப் பண­யம் வைத்து அவ­ருக்கு வெற்­றி­யைப் பெற்­றுக் கொடுத்­தோம். ஆனால் அவர் அவற்­றைக் குழி­தோண்­டிப் புதைத்­து­விட்­டார்.
இதே­வேளை, வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம், இன­வா­தத்தை தூண்­டி­வி­டும் செயற்­பா­டா­கவே நாங்­கள் பார்க்­கின்­றோம். தமிழ் மக்­கள் மத்­தி­யில் திரை­ம­றை­வில் பிரச்­சி­னை­க­ளைத் தோற்­று­விக்க முன்­னெ­டுக்­கப்­ப­டும் சதி­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

You might also like