side Add

வான் மோதி- 5 மாடுகள் உயிரிழப்பு!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வான் வீதியில் நடமாடிய மாடுகளை மோதித் தள்ளியது. அதில் 5 மாடுகள் உயிரிழந்தன.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் தியாவட்டவான் பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புதிய ஆளுநரின் பதவியேற்புக்காகச் சென்றிருந்த ஆதரவாளர்கள் பயணித்த வான், திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.

விபத்தில் 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

You might also like