side Add

வாவியில் கரையொதுங்கிய -சிறுமியின் சடலம்!!

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தை அண்மித்த வாவியருகில் சிறுமியின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டது.

காத்தான்குடி பூநொச்சிமுனை 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி (வயது 16) என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறுமியைத் தேடும் பணியில் மீனவர்கள், உறவினர்கள், கடற்படையினர், பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இன்று சடலம் கரையொதுங்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like