விக்னேஸ்வரனுக்கும்-அரசியல் தெரியும்!!

நெற்­றி­யில் பெரி­ய­தொரு குங்­கு­மப் பொட்டு. நெற்­றியை மூடிய பட்டை. நிமிர்ந்த தோற்­றம். எப்­போ­துமே வேட்டி சட்டை. மக்­க­ளைக் கவர்ந்­தி­ழுக்­கும் பாரம்­ப­ரி­யத் தோற்­றம். போதாக்­கு­றைக்கு எழுதி வாசித்­தால் அரங்­கத்­தைத் தன்­பக்­கம் கட்­டிப்­போ­டும் வசி­யம். விக்­னேஸ்­வ­ரன் வடக்­கில் இன்­ன­மும் நிலைத்து நிற்­ப­தற்கு இவை­தான் அவ­ருக்­குப் பலம். தன் மீதான விம்­பம் ஒன்று மக்­கள் மத்­தி­யில் கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருப்­பதை நன்கு உணர்ந்த அவர், 5 ஆண்­டு­க­ளில் படித்­துத் தேறி இப்­போது அர­சி­ய­லில் பழம் தின்று கொட்டை போட்­ட­வர்­போல் ஆகி­விட்­டார். தனது இருப்­புக்கு, தனது வாக்கு வங்­கிக்கு எவர் எவ­ரு­டன் கூட்­டுச்­சேர வேண்­டும் என்று நன்­றா­கவே ‘கணக்கு’ வைத்­தி­ருக்­கின்­றார். கொள்கை, கோட்­பாடு எல்­லாமே அதற்­குப் பின்­தான். முன் ஒரு பேச்சு, பின் ஒரு பேச்சு என்ற அர­சி­யல்­வா­தி­க­ளின் பால­பா­டத்­தில் விக்கி கைதேர்ந்­து­விட்­டார். சரா­ச­ரித் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் போன்று அவ­ரும் மாறி­விட்­டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்­டில் விக்­கி­யின் பிர­சங்­கம்
சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் அணி­யின் ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடந்­தது. வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும், தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யின் நிறு­வு­ந­ரும் செய­லா­ளர் நாய­க­மு­மான விக்­னேஸ்­வ­ரன் முதன்மை விருந்­தி­ன­ராக அதில் பங்­கேற்­றார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்­டில் தான் ஏன் பங்­கேற்றார் என்­பதை நியா­யப்­ப­டுத்த நீட்டி முழக்கி அங்கே அவர் ஒரு பிர­சங்­கத்­தையே நடத்தி முடித்­தார். ‘‘கடந்த கால கசப்­பான சம்­ப­வங்­களை மீண்­டும் மீண்­டும் கூறிக் கொண்டு ‘நான் சுற்­ற­வாளி நீ குற்­ற­வாளி’ என்று ஒரு­வ­ரோடு ஒரு­வர் நாம் மோதிக்­கொண்­டி­ரா­மல் ஒரு கொள்­கை­யின் கீழ் கட்­சி­கள் ஒன்­று­பட்­டுச் செயற்­ப­டு­வதே காலத்­தின் தேவை என்­பதை அன்று தம்பி பிர­பா­க­ரன் உணர்த்­தி­ய­தைப் புரிந்­து­கொண்டே நாம் செயற்­ப­ட­வேண்­டும்.

இதையே மக்­கள் விரும்­பு­கின்­றார்­கள். ‘குற்­றம் பார்க்­கில் சுற்றமில்லை’ என்­பது ஆன்­றோர் வாக்கு. கடந்த காலத்­தில் நாம் விட்ட தவ­று­களை உணர்ந்­த­வர்­க­ளாக, கடந்த காலத்­தில் இருந்து பாடங்­க­ளைக் கற்­றுக்­கொண்­ட­வர்­க­ளாக, ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட கொள்கை அடிப்­ப­டை­யில் நாம் பல கட்­சி­க­ளு­டன் இணைந்து செயற்­ப­ட­வி­ருக்­கின்­றோம். கடந்த காலப் பிழை­களை நாம் தொடர்ந்­தும் செய்­யா­தி­ருப்­ப­தற்கு நாம் யாவ­ரும் சேர்ந்து உழைக்க முன்­வர வேண்­டும். பிழை செய்­வது மனித சுபா­வம் மன்­னித்­தல் தெய்வ சுபா­வம் என்­பார்­கள். யார் பிழை செய்­தோம் என்­பது முக்­கி­ய­மல்ல. யாரே­னும் பிழை­கள் செய்­தி­ருந்­தால் அவற்றை மன்­னித்து கொள்­கை­கள் அடிப்­ப­டை­யில் சேர்ந்து முன்­னே­று­வதே நாம் தமிழ் மக்­க­ளுக்­குச் செய்­யக் கூடிய பலத்த சேவை­யா­கும். இத­னைத் தம்பி செய்­தார்.

ஏன் எம்­மால் முடி­யாது? தம்­பி­யின் மிகப் பெரிய எதிரி அந்­தக் காலத்­தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வே! ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி ஆயு­தக் குழு­வா­கச் செயற்­பட்ட காலத்­தைத் தற்­போது கைவிட்டு, அப்­போது நடந்­த­வற்­றைக் கெட்ட கன­வாக மறந்து இன்­றைய அர­சி­யல் நீரோட்­டத்­தில் தமிழ் மக்­க­ளின் விடு­தலை ஒன்­றையே முதன்­மைக் கோரிக்­கை­யாக ஏற்­றுக்­கொண்டு தமது கொள்கை வழி­யில் உண்­மை­யா­க­வும் நேரா­க­வும் நின்று செயற்­பட முன் வந்­துள்­ளார்­கள். அதை நாங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். அந்த நல்ல கார­ணத்­துக்­கா­கவே நான் இந்த நிகழ்­வில் கலந்து கொள்­வ­தற்கு எனது சம்­ம­தத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தேன்’’ என்று கூறி­னார்.

சுய­ந­லம் களை­யப்­பட்­டதா?
இதே விக்­னேஸ்­வ­ரன், 2013ஆம் ஆண்டு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் வெற்றி பெற்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்பு நிகழ்­வில் ஆற்­றிய உரை அவ­ருக்கு மறந்து போயி­ருக்­க­லாம். அல்­லது வச­திக்­காக அவர் அதை நினை­வு­ப­டுத்த மறந்­தி­ருக்­க­லாம். ‘‘பொது­வாழ்­கை­யில் வலி­யு­றுத்­தப்­ப­டும் ஏழு கொள்­கை­களை இந்­தத் தரு­ணத்­தில் எடுத்­தி­யம்­பு­வது உசி­தம் என்று நான் கரு­து­கின்­றேன். முத­லா­வது சுய­ந­ல­மின்மை. அதா­வது பொது வாழ்க்­கை­யில் நுழை­ப­வர்­கள் எப்­பொ­ழு­துமே பொது­ந­லம் கரு­தியே முடிவு எடுக்­க­வேண்­டும். தமக்கோ தமது குடும்­பத்­தா­ருக்கோ, தமது நண்­பர்­க­ளுக்கோ, தமது தம்­பி­மார்­க­ளுக்கோ நிதி சார்­பான அல்­லது வேறு­வ­கை­யான நன்­மை­கள் பெறக் கரு­தியோ முடி­வு­கள் எடுக்­கக் கூடாது’’ என்று குறிப்­பிட்­டார். ‘‘தமது தம்­பி­மார்­க­ளுக்கோ’’ என்ற வச­னத்தை இரண்டு தட­வை­கள் அவர் அழுத்­திக் கூறி­னார்.

அவர் ஏன் அன்று அவ்­வாறு கூறி­னார் என்­பது பல­ருக்கு மறந்து போயி­ருக்­க­லாம். மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் ஒற்­று­மையை வலி­யு­றுத்தி வெற்றி பெற்­ற­வர்­கள், பத­வி­யேற்­புக்கு இடை­யி­லேயே அமைச்­சுப் பத­வி­யால் பிரிந்து நின்­றார்­கள். அப்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன், தனது தம்பி சர்­வேஸ்­வ­ர­னுக்கு அமைச்­சுப் பத­வியை விக்­னேஸ்­வ­ர­னி­டம் கேட்­டி­ருந்­தார். அதை விக்­னேஸ்­வ­ரன் வழங்­க­வில்லை. அந்­தக் கோபத்­தில் பத­வி­யேற்பு நிகழ்­வில், சுரேஸ் பிரே­ம­சந்­தி­ர­னும், சர்­வேஸ்­வ­ர­னும் பங்­கேற்­க­வில்லை. தற்­போது சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் சுய­ந­லம் களைந்­து­விட்­டாரா? பொது­ந­லம் கருதி முடிவு எடுக்­கத் தொடங்­கி­விட்­டாரா? ஒரு­வேளை மீண்­டும் பதவி கிடைக்­க­வில்­லை­யா­யின் அவர் என்ன செய்­வார்? இவை ஒன்று பற்­றி­யும் விக்­னேஸ்­வ­ரன் தனது உரை­யில் தொட்­டும் பார்க்­க­வில்லை.

ஆயு­தக் குழு­வு­டன் இணைந்து செயற்­பட முடி­யாது என்­றார்!
2014ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சில் கூட்­டம் நடந்­தது. தமிழ் அர­சுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ரெலோ கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் அதில் பங்­கேற்­ற­னர். சுரேஸ் பிரே­ம­சந்­தி­ர­னும் அதில் கலந்து கொண்­டார். அந்­தக் கூட்­டத்­தில் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் விக்­னேஸ்­வ­ரனை நோக்­கிக் குற்­றம் சுமத்­தி­னார். ‘‘முத­ல­மைச்­ச­ராக நீங்­கள் 4 கட்­சி­க­ளின் சார்­பில்­தான் தெரிவு செய்­யப்­பட்­டீர்­கள். ஆனால் தமிழ் அர­சுக் கட்சி சார்­பா­ன­வர் போன்­று­தான் அதி­க­மாக நீங்­கள் நடந்து கொள்­கின்­றீர்­கள்’’ என்று கூறி­னார். நான் ஆயு­தக் குழுக்­க­ளு­டன் இணைந்து செயற்­பட முடி­யாது என்று அந்­தக் கூட்­டத்­தில் பதில் வழங்­கி­னார். இந்­தப் பதிலை ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­தது சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரனே.

சரி, ஆயு­தக் குழுக்­க­ளு­டன் இணைந்து செயற்­பட முடி­யாது அன்று கூறிய விக்­னேஸ்­வ­ர­னால் இன்று எப்­படி அதே ஆயு­தக் குழு­வு­டன் இணைந்து செயற்­பட முடி­யு­மா­க­வுள்­ளது. அதற்­கும் மேலாக அந்­தக் ஆயு­தக் குழு­வின் மாநாட்­டில் தான் பங்­கேற்­றதை நீட்டி முழக்கி எப்­படி நியா­யப்­ப­டுத்த முடி­கின்­றது?

திடீர் ஞானம் எப்­படி உண்­டா­யிற்று?
‘‘ஈ.பி.ஆர்.எல்.எவ். முன்­னணி ஆயு­தக் குழு­வாக செயற்­பட்ட காலத்­தைத் தற்­போது கைவிட்டு, அப்­போது நடந்­த­வற்­றைக் கெட்ட கன­வாக மறந்து இன்­றைய அர­சி­யல் நீரோட்­டத்­தில் தமிழ் மக்­க­ளின் விடு­தலை ஒன்­றையே முதன்­மைக் கோரிக்­கை­யாக ஏற்­றுக்­கொண்டு தமது கொள்கை வழி­யில் உண்­மை­யா­க­வும், நேரா­க­வும் நின்று செயற்­பட முன் வந்­துள்­ளார்­கள். அதனை நாங்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்’’ என்று மாநாட்­டில் உரை நிகழ்த்­திய விக்­னேஸ்­வ­ர­னுக்கு, 2014ஆம் ஆண்டு அது தெரி­யா­மல் போனதா?

இவை எல்­லா­வற்­றுக்­கும் மேலாக ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்­டில் அவர் அவிழ்த்து விட்ட புழுகு ஒன்­றும் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது. தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருக்­கின்ற பங்­கா­ளிக் கட்சி ஒன்று இணை­ய­வந்­த­போ­தும் தான் அதை ஏற்­றுக் கொள்­ள­வில்லை என்று விக்­னேஸ்­வ­ரன் தனது உரை­யில் விளா­சி­யி­ருந்­தார். இதன்­போது முன்­வ­ரி­சை­யில் இருந்த சித்­தார்த்­த­னை­யும் விளித்­துப் பேசி­யி­ருந்­தார். சித்­தார்­தனோ, தானோ தனது கட்­சி­யி­னரோ தமிழ் மக்­கள் கூட்­ட­ணி­யில் இணை­யக் கோரிக்கை முன்­வைக்­க­வே­யில்லை என்று பதி­லடி கொடுத்­தார். அதற்­கும் மேலாக, விக்­னேஸ்­வ­ர­னும் நன்­றாக அர­சி­யல் செய்­யத் தொடங்­கி­விட்­டார் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

அது­தான் உண்மை. விக்­னேஸ்­வ­ரன் இப்­போது ‘பக்கா’ அர­சி­யல்­வா­தி­யா­கி­விட்­டார். தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கே உரிய பொய்­யும், புரட்­டும், ஒன்­றுக்கு ஒன்று முர­ணான பேச்­சுக்­க­ளும், செய­லற்ற பேச்­சும் என்ற அடிப்­படை ‘போர்­மி­லாவை’ விக்­கி­யும் பின்­பற்­றத் தொடங்­கி­விட்­டார்.

You might also like