side Add

விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெகிராவ மற்றும் மதவாச்சி ஆகிய இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என அநூரதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கெகிராவ ஒளுகரந்த சமூர்த்தி வங்கிக் அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தார்.

அத்துடன், மதவாச்சி ஹொரவப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like
X