side Add

வெற்றிக் கொண்டாட்டம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தால், இரத்த சுத்திகரிப்பு வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு வெற்றி நிகழ்வு இன்று வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இது வரை குறித்த நிலையத்தினுடாக 20 பேருக்கு இரத்த சுற்றிகரிப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு நாளொன்றுக்கு நான்கு சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் பொறுப்பதிகாரி வைத்தியர் வைத்தியர் ஏ.அன்ரன் சிசில் தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கில்றோய் பீரிஸ் மற்றும் குறித்த நிலையத்தின் பணியாளர்கள் இணைந்து கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினர்.

You might also like