side Add

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளுக்கு – உமையாள்புரத்தில் அடிக்கல்!!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்ப்பட்ட உமையாள் புரம் பகுதியில் இன்று நடப்பட்டது.

முதல்கட்டமாக ஐம்பது குடும்பங்களுக்கு ஏழு அரை லட்சம் பெறுமதியில் வீடுகளை அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , ஆளுனரின் செயலாளர் ,வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபயின் தலைவர் வருகைதரத் தாமதமானதால் ஏற்பாட்டு நேரத்துக்கு நிகழ்வு நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like