side Add

வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான் – 250 பேர் உயிரிழப்பு- 86 லட்சம் பேர் வெளியேற்றம்!!

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறகு அங்கு பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நிலமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like
X