வேரவில் இந்து மகா வித்தியாலய குடி தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு!!

கிளிநொச்சி பூநகரி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கிய குடி தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

கல்வி பொருளாதார அமைப்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த நீர்ச் சுத்திகரிப்புத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு, பாடசாலை எல்லைக்குள் அமைந்திருந்த கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டு, நீர்த் தாங்கிகளுக்கான நீர் விநியோக கட்டமைப்புகள் வழங்கப்பட்டு குடி தண்ணீர் பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைக்கான நீர் விநியோக கட்டமைப்பை செயற்படுத்தும் திட்டத்துக்கான நிதியதவியை, இலண்டனில் வதியும் ஈழத்தமிழரான பாஸ்கரன் பார்த்தீபன் வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like