சூரிய ஒளி – உடலுக்கு அவசியம்!!

நாம் சிறு­வர்­களை வெயி­லில் நிற்­காதே மழை­யில் நனை­யாதே என்று கட்­டுப்­ப­டுத்­து­கின்­றோம். வெயி­லைத் தவிர்க்கக் குடை, தொப்பி, நீள­மான ஆடை­கள் சூரிய ஒளி­யைத் தடுக்­கும் பூச்­சுக்­கள் என்­ப­வற்­றைப் பாவிக்­கின்­றோம். இது எவ்­வ­ளவு தூரம் சரி­யா­னது. சூரிய ஒளி­யி­லுள்ள புற ஊதா கதிர்­கள் எமது தோலுக்கு அவ­சி­ய­மா­கும். எமக்­குத் தேவை­யான விற்­ற­மின் டியில் பெரும்­ப­குதி (90–95 வீதம்) சூரிய ஒளி மூல­மா­கத் தோலில் உற்­பத்­தி­யா­கின்­றது. போதிய சூரிய ஒளி நேர­டி­யா­கத் தோலில் படா­விட்­டால் விற்­ற­மின் டி குறை­பாடு ஏற்­பட்டு பல நோய்­கள் ஏற்­ப­ட­லாம்.

விற்­ற­மின் டி குறை­பாடு
பொது­வான ஒன்­று­தான்
அண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி உல­கில் பல­ருக்கு விற்­ற­மின் டி பற்­றாக்­கு­றை­யி­ருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. ஆண்டு முழு­வ­தும் சூரிய ஒளி குறை­வில்­லா­மல் கிடைக்­கும் இலங்கை போன்ற நாடு­க­ளில் விற்­ற­மின் டி குறை­பாடு உள்­ளது அதிர்ச்­சி­க­ர­மான விட­ய­மா­கும். வெள்­ளை­யர்­க­ளை­விட கறுப்­பான தோலு­டைய ஆசிய நாட்­ட­வர்­க­ளில் தோலில் அதி­கம் காணப்­ப­டும் மெல­னின் என­னும் நிறப் பொரு­ளால் சூரிய ஒளி தோலி­னுள் ஊடு­று­வது குறை­வ­டை­கின்­றது. இத­னால் வெள்­ளை­யர்­க­ளை­விட ஆசிய நாட்­ட­வர்­க­ளான நாம் அதிக நேரம் வெயிலை உட­லில் பட­வி­ட­வேண்­டும். இடம்­பெ­யர்ந்து மேலைத்­தேய நாடு­க­ளில் வாழும் ஆசிய நாட்­ட­வர்­க­ளில் அதி­லும் குறிப்­பா­கப் பெண்­க­ளில் விற்­ற­மின் டி குறை­பாடு அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. இதற்­குக் கார­ணம் எம்­ம­வர்­கள் குளிர் கார­ண­மாக உடலை மூடிய உடை­களை அணி­வ­தும் வீட்­டை­விட்டு வெளி­யில் வரு­வது குறை­வாக இருப்­ப­து­மே­யா­கும்.

சூரிய ஒளி­யின்
நன்­மை­கள் சில
சூரிய ஒளி­யால் உட­லுக்­குக் கிடைக்­கும் நன்­மை­கள் எவை?

1. விற்­ற­மின் டி கல்­சி­யம் அகத்­து­றிஞ்­சப்­ப­டு­வ­தற்கு அவ­சி­ய­மா­கும். எனவே, எலும்பு, பல் ஆரோக்­கி­யத்­துக்கு சூரி­ய­ஒளி அவ­சி­ய­மா­கும். குறிப்­பாக மாத­வி­லக்கு நின்ற பின் பெண்­க­ளில் ஏற்­ப­டும் Osteoporosis எனும் நோய்க்கு கல்­சி­யம் குறை­வது கார­ண­மா­கும்.

2.சூரிய ஒளி­யால் எமது உட­லில் Sorotonin எனும் ஓமோன் அதி­க­மா­கச் சுரக்­கப்­ப­டு­கின்­றது. இந்த ஓமோன் சோம்­பல் இல்­லா­மல் சுறு­சு­றுப்­பாக வைத்­தி­ருக்க உத­வு­கின்­றது. சூரிய ஒளி குறைந்த குளிர்­கா­லங்­க­ளில் மேலைத்­தேய நாடு­க­ளில் நரம்­புத் தளர்ச்சி அதி­கம் ஏற்­ப­டு­கின்­றது.

3.சூரிய ஒளி­யா­னது உட­லின் கொலஸ்­ரோல் அளவு, குரு­தி­ய­முக்­கம் என்­ப­வற்­றைக் குறைக்­கின்­றது. வெயில் குறைந்த குளிர்­கா­லங்­க­ளி ­லேயே மார­டைப்பு பொது­வாக ஏற்­ப­டு­கின்­றது. எனவே சூரிய வெளிச்­சம் மார­டைப்­பைக் குறைக்­கின்­றது என்­பதை ஊகிக்­க­லாம்.

4.அது மட்­டுமா! சூரிய ஒளி உட­லில் படு­வ­தால் உடல் பரு­மன் குறை­வ­டை­வ­து­டன் நீரி­ழிவு ஏற்­ப­டு­வ­தும் குறை­வ­டை­கின்­ற­தாக ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

5.சூரிய ஒளி­யால் உடல் நோ, மூட்­டு­வா­தம் என்­பன குறை­வ­டை­கின்­றன.

6.அதி­க­மான சூரி­ய­ஒளி குறிப்­பாக வெள்­ளை­யர்­க­ளில் தோலில் புற்­று­நோயை ஏற்­ப­டுத்­த­லாம். ஆனால் அள­வான சூரி­ய­ஒளி உட­லில் படு­வ­தால் பல புற்­று­நோய்­கள் ஏற்­ப­டு­வது குறை­வ­டை­வ­தாக அண்­மை­யில் வெளி­யான ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. மார்ப்­புப் புற்­று­நோய், குடல் புற்­று­நோய், கருப்­பைப் புற்­று­நோய், இரப்­பைப் புற்­று­நோய் என்­பன அவற்­றில் சில­வா­கும்.

7.மித­மான சூரிய ஒளி­யால் மாத­வி­லக்­குப் பிரச்­சி­னை­கள் குறை­வ­டை ­கின்­றன. அத்­து­டன் மாத­வி­லக்கு நிற்­ப­தும் தள்­ளிப்­போ­கப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மல்­லா­மல் பெண்­க­ளி­லும் ஆண்­க­ளி­லும் பிள்ளை பெறும் பாக்­கி­ய­மும் அதி­க­ரிக்­கின்­றது.

8.சூரிய ஒளி உட­லில் படு­வ­தால் நோய் எதிர்ப்பு சக்தி அதி­க­ரிக்­கின்­றது.
சூரிய ஒளி தவிர ஏனைய வழி­க­ளால் விற்­ற­மின் டி இனை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­ள­லாம்? என்ற கேள்வி எழு­வது இங்கே அவ­சி­ய­மா­கி­றது. எண்­ணெய்த் தன்­மை­யுள்ள மீன்­க­ளில் விற்­ற­மின் டி காணப்­ப­டு­கின்­றது. பால், முட்டை என்­ப­வற்­றி­லும் காணப்­ப­டு­கின்­றது. ஆனால் உணவு மூலம் எடுக்­கப்­ப­டும் விற்­ற­மின் டி உட­லுக்­குப் போது­மா­னது அல்ல. விற்­ற­மின் டி உள்ள மாத்­தி­ரை­கள் இப்­போது பாவ­னை­யில் உள்­ளன.

ஆசிய நாட்­ட­வர்­க­ளாக நாங்­கள் ஒவ்­வொரு நாளும் சுமார் அரை­மணி நேரம் வெயி­லில் நின்­றால் போது­மா­ன­தா­கும். குறிப்­பாக காலை 6 மணி தொடக்­கம் 10 மணி­வரை அல்­லது மாலை 4 மணி முதல் 6 மணி­வ­ரை­யுள்ள நேரத்­தில் சூரி­ய­ஒளி படத்­தக்­க­வாறு நிற்­க­லாம். இந்த நேரத்­தில் உடற்­ப­யிற்சி அல்­லது நடப்­ப­தால் எமக்கு இரட்­டிப்பு நன்மை ஏற்­ப­டும்.

எனவே விலை­யு­யர்ந்த மருந்­து­களை நாடிச்­செல்­லும் நாம் இயற்­கை­யான சூரிய ஒளி, கடற்­கரை காற்று, இயற்கை அழகு என்­ப­வற்றை ஏன் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. இவற்­றால் எமது உட­லும் உள்­ள­மும் நலன்­பெ­றும். வெயி­லில் நின்­றால் முக­அ­ழகு குன்­றி­வி­டும் எனப் பயப்­ப­டா­தீர்­கள். காலை, மாலை வெயி­லால் ஏற்­ப­டும் நன்­மை­கள் பல.

எஸ்.கேதீஸ்வரன், பொது­வைத்­திய நிபு­ணர்,
யாழ்.போதனா மருத்­து­வ­மனை

You might also like