அதிபரால் உயிர் அச்சுறுத்தல் – பிரதி அதிபர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரால் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்து பிரதி அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல்லூரி அதிபர், பிரதி அதிபரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியமையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு பிரதி அதிபர் மயக்கமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like