அனுமதியற்ற இடத்தில் மணல் ஏற்றிய வாகனங்கள் பறிமுதல்!!

வேறு இடத்தின் அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றிய வாகனங்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டன. அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் உள்ள கள்ளியடி மற்றும் உடையார் கட்டு, பாவாடைக் கல்லாற்று பகுதிகளில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரங்களை பொலிஸார் சோதனையிட்டனர்.

அத்துடன் சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்களையும் பொலிஸார் சோதனை செய்தனர்.

குறித்த இடங்களில் மணல் ஏற்றியவர்கள் வேறு இடங்களுக்குரிய அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்தமை தெரியவந்தது.

இதன்போது கைதான ஆறு சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மற்றும் டிப்பர்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like