அனுமதியில்லாது கட்டப்படும் கட்டங்கள் இடித்தழிக்கப்படும்- நல்லூர் பிரதேச சபை தீர்மானம்!!

0 62

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இனிவரும் காலங்களில் அனுமதி பெறாது கட்டப்படும் கட்டடங்களை இடித்தழிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இன்று இடம்பெற்றது.

சபையின் எல்லைக்குள் சட்ட விரோதக் கட்டடங்கள் கட்டப்படும் போது அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். இதனைப் பொறுப்படுத்தது தொடர்ந்து கட்டடம் கட்டினால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அத்துடன் கடமை முடிந்து விட்டதா?. எனவே அனுமதி பெறாத கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதற்கு ஓர் முடிவு எடுக்க வேண்டும் என்று சபை உறுப்பினர் இராசலிங்கம் சபையில் தெரிவித்தார்.

்சட்ட விரோதக் கட்டடம் எனக் கண்டறியப்படடால் அதனை அழியுங்கள். அது யாராக இருந்தாலும் பார பட்சம் இன்றி நடவடிக்கை எடுங்கள்“ என்று உறுப்பினர் மயூரன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த தவிசாளர், அமர்வில் ஓர் தீர்மானத்தை எடுங்கள் நான் அதனை நடைமுறைப் படுத்துகின்றேன் என்றார்.

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க, குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் பத்திரிக்கை ஊடாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

You might also like