side Add

அப்பாவுடன் வாருங்கள் -மைத்திரியிடம் கோரும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்!!

“கிளிநொச்சி வருகை தரவுள்ள அரச தலைவர் மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும்” என்று ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார்.

அரச தலைவரின் வருகையை முன்னிட்டு, ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

“நாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள். எனவே தங்களின் நிலமையைக் கருத்திற் கொண்டு அரச தலைவர் மாமா, எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகின்றோம். அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் மாமா உதவ வேண்டும்” என்று ஆனந்தசுதாகரனின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like
X