side Add

அர்ஜூன் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

நடிகர் அர்ஜூன் மீது, பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 2016ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் பிரபல ‘லூசியா’ படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். தமிழில், ‘எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. அதன்பின், பல படங்களில் தோன்றிய அவர், 2016ம் ஆண்டு நடிகர் அர்ஜூனுடன் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி குற்றம் சாட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் அவர் எழுதிய பதிவில், ஒரு நெருக்கமான காட்சியை படம்பிடிக்க ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்த போது, நடிகர் அர்ஜூன் எதிர்பாராத நேரத்தில் தன்னை கட்டியணைத்து தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். “நெருக்கமான காட்சியை இதுபோல நடிக்கலாமா” என அதன்பின் இயக்குனரிடம் அர்ஜூன் கேட்டதாக தெரிவித்துள்ளார். “யதார்த்தமான சினிமா எடுப்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், இதுபோல முன்னறிவிப்பின்றி யாரும் என்னிடம் நடந்து கொண்டதில்லை” என்றார் ஸ்ருதி. அதன்பின்னும் கூட தன்னை அர்ஜூன் பலமுறை வெளியே தனியமையில் அழைத்தாகவும், தவறாக பேசியதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

பல மொழிகளில் 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அர்ஜூன், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்த பொய்களை கேட்டு நான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like