ஆப்­க­னிஸ்­தா­னில் தற்­கொ­லைத் தாக்­கு­தல்: 32 பேர் சாவு; 130 பேர் காயம்!!

ஆப்­கா­னிஸ்­தா­னில் ஆயு­த­தா­ரி­கள் நடத்­திய தற்­கொ­லைத் தாக்­கு­த­லில் 32பேர் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். 130க்கு மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­டைந்­தி­ருக்­கி­றார்­கள். ஆப்­கா­னிஸ்­தா­னின் நாங்­கர்­ஹார் மாகா­ணத்­தில் உள்ள அசின் மாவட்­டத்­தில் பள்ளி ஒன்­றின் அருகே கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று இந்­தத் தற்­கொ­லைப் படைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. கொல்­லப்­பட்ட அனை­வ­ரும் பொது­மக்­கள் ஆவர்.

மருத்­து­வ­ம­னை­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காய­ம­டைந்த பல­ரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தால் சாவு எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என்று கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்த அமைப்­பும் பொறுப்­பேற்­க­வில்லை. இதற்கு முன்­னர், ஆப்­க­னிஸ்­தா­னின் தாஸ்­சித் மற்­றும் வடக்­குப் பகு­தி­யில் பாது­காப்­புப் படை­யி­ன­ரைக் குறி­வைத்­துத் தலி­பான் ஆயு­த­தா­ரி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் 37பேர் கொல்­லப்­பட்ட நிலை­யில் இந்­தத் தாக்­கு­தல் நடந்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like