ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை!!

இந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­ட­லைத் தடை செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. இந்து மத அலு­வல்­கள் அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தாக்­கல் செய்­தி­ருந்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கு நேற்று அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று காலை அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் இந்து ஆல­யங்­க­ளில் மிருக பலி­யி­ட­லைத் தடை செய்ய வேண்­டும் என்று கோரும் அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ள­தை­ய­டுத்து அதற்­கான சட்ட வரைவை விரை­வில் அமைச்­சர் சுவா­மி­நா­தன் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­க­வுள்­ளார். இந்த சட்­ட­மூ­லம் நிறை­வேற்­றப்­பட்­ட­வு­டன் இந்து ஆல­யங்­க­ளில் மிரு­க­பலி முற்­றா­கத் தடை செய்­யப்­ப­டு­மென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­ச­ர­வை­யின் இந்த தீர்­மா­னம் தொடர்­பில் தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அலு­வல்­கள் இரா­ஜாங்க அமைச்­சர் நிரோ­ஷன் பெரேரா தெரி­வித்­தா­வது-

இந்­துக் கோவில்­க­ளில் அல்­லது அதன் எல்­லைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­க­ளில் மேற்­கொள்­ளப்­ப­டும் மிருக பலி மற்­றும் பற­வை­கள் பலி­யி­டு­வதை தடை­செய்ய அரசு தீர்­மா­னித்­துள்­ளது.

மிருக பலி சம்­பந்­த­மாக சட்ட ஒழுங்­க­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன் முன்­வைத்த யோச­னைக்கு அமை­வாக இந்த தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. அது தொடர்­பான சட்ட வரைவை இயற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

இந்து மதத்­தின் பெய­ரால் செய்­யப்­ப­டு­கின்ற மிருக வதையை ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தற்கு நிறு­வன ரீதி­யான முறை­யொன்று இல்லை. கோவில்­க­ளின் நிர்­வா­கம், தனி நப­ரால் அல்­லது மக்­க­ளால் நிய­மிக்­கப்­பட்ட முகா­மைக் குழுக்­க­ளால் இது நடத்­தப்­ப­டு­கின்­றது.

மிரு­க­பலி இந்து மதத்­தின் பாரம்­ப­ரிய முறை என்ற போதி­லும் பெரும்­பா­லான இந்து மதத்­தி­னர் அதை ஏற்­றுக் கொள்­வ­தில்லை. மிருக பலி­யி­டு­வதை தண்­டனை வழங்­கக் கூடிய சட்­ட­மாக்­கப்­பட வேண்­டும் என்­பது இந்து மக்­களை பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் மக்­கள் பிர­தி­நி­தி­கள் மற்­றும் இலங்கை இந்து சங்­கத்­தின் கருத்­தா­கும்.- என்­றார்.

You might also like