ஆளணிப் பற்றாக்குறையுடன் இயங்கும் புதுக்குடியிருப்பு மருத்துவமனை!!

0 94

ஆதார மருத்துவமனை ஒன்­றில் பொது­வாக இருக்க வேண்­டிய அடிப்­படை வச­தி­களை புதுக்­கு­டி­யி­ருப்பு மருத்துவமனை கொண்­டி­ருக்­க­வில்லை.
வளப்­பற்­றாக்­கு­றை­யு­ட­னேயே செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு ஆதார மருத்­து­வ­மனை 73 வரு­டங்­கள் பழ­மை­யா­னது. 1948ஆம் ஆண்டு கிரா­மிய மருத்­து­வ­ம­னை­யாக தொடங்­கப்­பட்டு இன்று ஆதார மருத்­து­வ­ம­னை­யாக உயர்ந்து நிற்­கின்­றது.
வளப் பற்றாக்குறை தொடர்­பில் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர் ப.தயா­னந்தா தெரி­வித்­த­தா­வது:

இறு­திப்­போ­ரின்­போது துண்­டு­ துண்­டாக உடைக்­கப்­பட்டு நிர்­மூ­லம் ஆக்­கப்­பட்­டது. தற்­போது ஆதார மருத்­து­வ­ம­னை­யாக தரமு­யர்த்­தப்­பட்­டுள்­ளது.
எனி­னும் ஆள­ணிப் பற்­றாக்­குறை உட்­பட்ட பல்­வேறு வளப் பற்­றாக்­கு­றை­யு­டன் இயங்கி வரு­கின்­றது.

நான்கு மருத்­து­வர்­க­ளும், பத்து தாதி­யர்­க­ளும், சுமார் 30 தொடக்­கம் 40 வரை­யி­லான ஏனைய பணி­யா­ளர்­க­ளும் தற்­போது பணி­யாற்­று­கின்­ற­னர். புதுக்­கு­டி­யி­ருப்புப் பிர­தே­சத்­தில் கிட்­டத்­தட்ட 45 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட மக்­கள் வசிக்­கின்­ற­னர். இந்த மக்­கள் அனை­வ­ருக்­கும் சிறப்­பான சேவை மேற்­கொள்ள இருக்­கின்ற பணி­யா­ளர்­கள் போது­மா­ன­தாக இல்லை.

ஆதார வைத்­தி­ய­சா­லை­யாக்­கப்­பட்ட இந்­த­நி­லை­யில் மருத்துவ மனைக்கென மருத்­துவ நிபு­ணர் கட்­டா­யம் தேவை. மருத்து வமனை வேலை­க­ளுக்கு தேவை­யான ஆண் ஊழி­யர்­க­ளும் அதா­வது சுகா­ தா­ரப்­பணி ஊழி­யர்­க­ளில் ஆண் ஊழி­யர்­கள் முக்­கி­ய­மாக தேவைப்­ப­டு­கின்­ற­னர்.

ஆய்­வு­கூட வச­தி­கள் இருந்­தும் ஆய்­வு­கூட பரி­சோ­த­கர்­கள் எவ­ரும் பணி­யில் அமர்த்­தப்­ப­ட­வில்லை. சத்­தி­ர­சி­கிச்­சைக்­கூ­டம், இரத்­த­வங்கி, முழு­மை­யான ஆய்­வு­கூ­டம், எக்ஸ்றே இயந்­தி­ரம், அவ­ச­ர­சி­கிச்­சைப்­பி­ரிவு என்­ப­ன­வும் முக்­கிய தேவை­யாக உள்­ளன. முக்­கி­ய­மான நோயா­ளர்­களை மாஞ்­சோலை மருத்துவ மனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கி­றது.

கட்­டு­மா­னங்­களை பொறுத்த மட்­டில் ஓரா­ளவு போது­மா­ன­தாக இருந்­தா­லும் தாதி­யர்­க­ளுக்­கான விடு­தி­யும் அமைக்­கப்­பட்டு அதற்­கான வேலை­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது- –என்­றார்.

அண்­மை­யில் நடை­பெற்ற புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச மருத்­து­வ­ம­னையை ஆதார மருத்­து­வ­ம­னை­யாக தரம் உயர்த்­தும் நிகழ்­வி­லும் மருத்­து­வர் இதனை தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like