இந்து சமய வாழ்வியல் எடுத்தியம்பும்- தெய்வீக கிராம நிகழ்வு!!

இந்து சமய வாழ்வியல் நெறிமுறைகளை பேணி பாதுகாக்கும் தெய்வீக கிராம நிகழ்வு வீரமுனை கிராமத்தில் நடைபெற்றது.

இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய காவடி ஆட்டம், கோலாட்டம் ,மங்கள வாத்தியங்கள் முழங்க வீரமுனை வீதி வழியாக விருந்தினர்கள் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஆலய வளாகத்தினுள் குருபூசை ,கோமாதா பூசை,பிடியரிசி சேமிப்பு,வஸ்த்துதானம்,மரநடுகை போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

You might also like