உல­கத் தமிழ்ச் செம்­மொ­ழி­ மா­நாடு!!

0 29

பகுதி-27

தமி­ழ­கத்­தில் க­ரு­ணா­நி­தி­யின் பங்­க­ளிப்­புக்­கள் வ­ர­லா­றா­க­ நி­லைத்­து­ வி­டக்­கூ­டா­து ­என்­ப­தில் ஜெய­ல­லி­தா­ அ­ர­சாங்­கம் மிக்­க­ க­வ­ன­மாக இருந்­தது. அவ்­வா­றே அண்ணா நூற்­றாண்டு நூல­கத்­தை ­கு­ழந்­தை­கள் நல­ ம­ருத்­து­வ­ம­னை­யா­க­ மாற்­ற­ முயற்சித்­தார்­கள்.இருப்­பி­னும், கரு­ணா­நி­தி­ த­ன­து­ த­மிழ்ப்பணி­யைத் ­தொ­டர்ந்­தி­ருக்­கி­றார். அதில் அண்­மை­ய­ வ­ர­லா­று­க­ளில் மிக­ முக்­கி­ய­மா­ன­து­ செம்­மொ­ழி­ மா­நாடு.

ஈழத்­த­மி­ழர் இறு­திப் போரில் பல­ ஆ­யி­ரக்­க­ணக்­கில் கொல்­லப்­பட்­ட­போ­து­ க­ரு­ணா­நி­தி அ­த­னைத் தடுப்­ப­தற்­கு­ மு­யற்­சிக்­க­வில்­லை­ என்­ற­ வி­மர்­ச­னம் அவர்­மீது இருந்­த­ கா­ல­கட்­டத்­தில், தமிழுக்­கு­ மா­நா­டு­ ந­டத்­த­ முற்­பட்­டார். முத­லில் உல­கத் தமி­ழா­ராய்ச்­சி­ ம­ா­நாட்­டை­ ந­டத்­து­வ­து­ என்­று­தீர்­மா­னித்தார்கள். ஆனால், தமி­ழா­ராய்ச்­சி­ மா­நாட்­டுக் குழு அதற்­கு­ ஒத்­து­ழைக்­க­வில்லை. அத­னால் பின்­னர் செம்மொழி­ மா­நா­டு­ ந­டத்­து­வ­தெ­னத் தீர்­மா­னித்­தார்.ஈழத்­த­மி­ழர்­கள் இறு­திப் போரில் சாகின்­ற­போ­து­அ­த­னைத் தடுப்­ப­தற்­கு­ மு­யற்­சி­கள் எடுக்­கா­த­ க­ரு­ணா­நி­தி­ ந­டத்­துக்­கின்­ற­ செம்­மொ­ழி­ மாநாட்­டை­ ப­கிஸ்க­ரிக்­க­ வேண்­டும் என்­று­ அண்­ணா ­தி­ரா­வி­ட­ முன்­னேற்­றக் க­ழ­க­மும் ஈழ­ ஆ­த­ர­வுக் கட்­சி­க­ளும் கோரிக்­கை­ வி­டுத்­த­ன.

கோயம்புத்தூரில் நடந்த
முதலாவது செம்மொழி மாநாடு
இருப்­பி­னும்,தமிழ்­நா­டு­அ­ர­சின் ஆத­ர­வில் முத­லா­வ­து­உ­ல­கத் தமிழ்ச் செம்­மொ­ழி­ மா­நா­டு­ கோ­யம்­புத்­தூ­ரில் கோலா­க­ல­மா­க­ந­டை­பெற்­றது. உல­கத் தமிழ்ச் செம் மொ­ழி ­மா­நாடு 2010 ஆம் ஆண்­டு­ ஜூன் 23 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை­கோ­யம்­புத்­தூ­ரில் கொடி­சி­யா­ வ­ளா­கத்­தில் நடை­பெற்­றது. கோயம்­புத்­தூ­ரில் 2010 ஆம் ஆண்டில் நடை­பெற இருந்­த­உ­ல­கத் தமி­ழா­ராய்ச்­சி­மா­நாட்­டுக்­கு­ ஈ­டா­கத் தமி­ழ­க­மு­தல்­வர் மு. கரு­ணா­நிதி இந்­த­மா­நாட்­டை­ ஒ­ருங்­கி­ணைத்து இருக்­கி­றார். இந்­த­மா­நாட்­டு­டன் தமிழ் இணை­ய­மா­நா­டும் சேர்த்­து­ந­டத்­தப்­பட்­டது.

இந்­த­ மா­நாட்­டில் மு. கரு­ணா­நி­தி­ த­ன­து­ த­லை­மை­யு­ரை­யில், “ஒரு­மொ­ழி­யைச் செம்­மொ­ழி­யா­கக் கூறத் தேவைப்­ப­டும் 11 தகு­தி­க­ளை­மட்­டு­மின்றி,அதற்­கு மே­லா­ன­ மேன்­மை­யா­ன­ த­கு­தி­க­ளைப் பெற்­ற­மொழி, தமிழ் மொழி­ என்­ப­தை­ த­மி­ழ­கத்­தில் மட்­டு­மின்றி, தமி­ழைக் கற்­றுத் தேர்ந்­த­உ­ல­க­அ­றி­ஞர்­கள்கூட ஒப்­புக் கொண்­டுள்­ள­னர். உல­கின் முத­லா­வ­து­ தாய் மொழி­யா­கத் தமிழ்மொழி­,அ­றி­ஞர்­க­ளால் ஒப்­புக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது” என்று கூறி­னார்.

செம்மொழி தமிழ் விருது
பின்லாந்து மொழியறிஞர்
ஒருவருக்கு வழங்கப்பட்டது
இந்­த­ மா­நாட்­டில் முதல் முறை­யா­க­ அ­றி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ­க­லை­ஞர் மு. கரு­ணா­நி­தி­ செம்­மொ­ழித் தமிழ் விருதை­ பின்­லாந்­தைச் சேர்ந்­த­ மொ­ழி­ய­றி­ஞர் பேரா­சி­ரி­யர் அஸ்­கோ­பர்ப்­போ­லா­வுக்கு இந்­தி­யக் குடி­ய­ர­சுத் தலை­வர் வழங்­கி­னார். விரு­தைப் பெற்­றுக் கொண்ட அஸ்­கோ­பர்­போ­லோ­ ஏற்­பு­ரை­ நி­கழ்த்­தி­னார். மாநாட்­டில்­உ­ல­கின் பல­ப­கு­தி­க­ளி­லி­ருந்­து­வந்­தி­ருந்­த­ த­மி­ழ­றி­ஞர்­கள் பலர் பங்­கு­கொண்­டார் கள்.

ஈழத்­த­மிழர் விட­யத்­தில் தீர்க்­க­மா­ன­ மு­டி­வெ­த­னை­யும் எடுக்­கா­த­ க­ருணா­நி­திக்­கு­உ­ல­கெங்­கு­மி­ருந்­து­ கண்­ட­னங்­கள் குவிந்­தன. இத­னைத் எதிர்­தகொள்வதற்­கா­க­ யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­உ­ல­க­றிந்­த­ த­மிழ்­பே­ரா­சி­ரி­ய­ரா­ன கா. சிவத்­தம்­பி­க்கு வி­சே­ட­ அ­ழைப்­பு ­வி­டுத்­தார்­கள். முத­லில் மாநாட்­டில் பங்­கு­கொ­ள்ள ம­றுத்­த­ பே­ரா­சி­ரி­யர் கா.சிவத்­தம்­பி ­பின்­னர் மகா­நாட்­டில் பங்­கு­கொண்­டார். ஆத­னால் அவர் மீ­தும் கண்­ட­னங்­கள் குவிந்­தன.

இலங்கைத் தமிழர்கள்
விடயத்தில் கருணாநிதி தெளிவாக
இல்லையென குற்றச்சாட்டு
இலங்­கைத் தமி­ழர் விட­யத்­தில் கலை­ஞர் மு.கரு­ணா­நி­தி­ ஒ­ரு­ தௌி­வா­ன­ நி­லைப்­பாட்­டில் இல்­லை ­என்­ப­து­தான் என­து­ நி­லைப்­பாடு. இருந்­தா­லும் தமி­ழுக்­கு­ ஒ­ரு­வி­ழா­ ந­டக்­கி­றது. அத­னை­ நான் வர­வேற்­கி­றேன். நான் ஒரு­த­மிழ் ஆர்­வ­லன். தமி­ழைப்­ப­டிப்­ப­வன் அந்­த­வ­கை­யில் செம்மொழி மா­நாட்­டை­ எ­திர்க்கவில்லை என பேரா­சி­ரி ­யர் கா.சிவத்­தம்பி.மா­நாட்­டின் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரா­க­உ­ரை­யாற்­றி­னார்.

“கலை­ஞர் கரு­ணா­நி­தி­ த­ம­து­ ஆற்­ற­லைப் பயன்­ப­டுத்­தி­ மா­பெ­ரும் சாத­னை­ ஒன்­றைப் படைத்­துள்­ளார். இந்­த­ உ­ல­கத் தமிழ் செம்­மொ­ழி­மா­நா­டு­ ஒ­ரு­சா­தா­ர­ண­மா­நா­டல்ல. இதனைத் தமிழர் வர­லாற்­றில் முத்­தி­ரை­ ப­திக்­கும் மிகப்­பெ­ரி­ய­ மா­நா­டா­க­வே­ நாம் காண்­கின்­றோம்,” என­ வாழ்த்­து­ரை ­ வ­ழங்­கி­ய­ பே­ரா­சி­ரி­யர் கா.சிவத்­தம்­பி ­தெ­ரி­வித்­தார். உல­கின் பல­நா­டு­க­ளில் வாழும் தமி­ழர்­க­ளின் குழந்­தை­கள் தமிழ் கற்­க­ எ­ளி­மை­யா­ன­ புத்­த­கங்­க­ளை­ த­மி­ழ­க­ அ­ர­சு­ வௌி­யி­ட­வேண்­டும் என்­கி­ற­ வேண்­டு­ கோ­ளைப்­ பே­ரா­சி­ரி­யர் சிவத்­தம்­பி­ ம­கா­நாட்­டில் வலி­யு­றுத்­தி­னார்.

You might also like