உள்ளக வீதிப் புரனரமைப்பு ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ மயூரன், தென்மராட்சி பிரதேச உதவிப் பிரதேச செயலர் திருமதி வினோஜிதா, பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், கிராம மட்ட பிரதிநிதிகள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like