side Add

எலும்புக் கூடுகளின் மாதிரிகள்- விரைவில் காபன் பரிசோதனைக்கு!!

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.

மழை காரணமாக அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்திருந்தது. அதனால் அகழ்வு இடம் பெறும் பகுதியைச் சுற்றி மறைப்பு அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் 6 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த மாதிரிகளானது வேவ்வேறு மண் தட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்ட பொதுவான மாதிரிகளாக உள்ளன.

மாதிரிகளில் எலும்பு மற்றும் பற்கள் உள்ளடங்களாக பெண்கள் என சந்தோகிக்கின்ற மாதிரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. மாதிரிகள் அனைத்தும் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like