எழும் கேள்­வி­கள் பல!

அதி­கா­ரத்­தைப் பின்­க­த­வால் கைப்­பற்­றிய ஓர் ஆட்­சி­யின் மீது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­ வேற்­றப்­பட்ட பின்­ன­ரும் அமைச்­ச­ரவை இயங்­கு­வது சட்­டத்துக்கு முர­ணா­னது என்று தெரி­வித்து மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் இரு வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன. மகிந்­த­வின் ஆட்­சிக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் வாக்­க­ளித்த 122 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ன­தும் சத்­தி­யக் கட­தா­சி­க­ளு­டன் இந்த வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் கூட்­ட­மைப்­பின் மூத்த ஆலோ­ச­க­ரான சட்­டத்­த­ரணி கன­க­ஈஸ்­வ­ரன் ஆகி­யோரே இந்த இரு வழக்­கு­க­ளை­யும் தாக்­கல் செய்­துள்­ள­னர். நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­ம­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது என்­பது பகி­ரங்­க­மா­கிய நிலை­யி­லும் பதவி விலக மறுத்து ஆட்­சிக் கதி­ரை­யைக் கெட்­டி­யா­கப் பிடித்­துள்ள மகிந்த ஆட்­சியை நெருக்­க­டிக்கு உள்­ளாக்­கும் ரணில் தரப்­பின் மற்­றொரு நட­வ­டிக்­கை­யா­கவே இந்த வழக்­கு­க­ளும் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்ற ஒழுங்­கு­மு­றை­க­ளுக்கு அமைய இடம்­பெ­ற­வில்லை என்று நிரா­க­ரித்­து­வ­ரும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் நட­வ­டிக்கை சரி­யா­ன­து­தானா இல்­லையா என்­கிற சட்ட விவா­தத்­தை­யும் இந்த வழக்­கு­கள் மற்­றொரு பரி­மா­ணத்­தில் அணு­கும். ஒரு­வேளை இந்த வழக்­கி­லும் ரணில் தரப்­பி­னர் மகிந்த ஆட்சி மீது இடைக்­கா­லத் தடை ஒன்றை நீதி­மன்­றத்­தில் பெற்­றுக் கொண்­டா­லும்­கூட தற்­போ­தைய அர­சி­யல் குழப்­பங்­கள் தீர்­வுக்கு வந்­து­வி­டும் என்று சொல்­வ­தற்­கில்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­தான் தலைமை அமைச்­சர் என்­கிற முடி­வில் இருக்­கும் வரை­யில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியை ஆட்­சி­ய­மைக்க அனு­ம­திப்­ப­தில்லை என்­ப­து­தான் தற்­போது வரைக்­கும் அரச தலை­வ­ரின் நிலைப்­பாடு. எனவே ரணி­லைத் தலைமை அமைச்­ச­ராக்கி அவ­ரது தலை­மை­யில் அமைச்­ச­ரவை ஒன்றை அமைப்­ப­தற்கு மைத்தி இணங்க மாட்­டார். அப்­படி இணங்­கு­வது தனது அர­சி­யல் தற்­கொ­லைக்கு நிக­ரா­னது என்­பது அவ­ருக்­குத் தெரி­யும்.

எனவே கிளித்­தட்டு ஆட்­டம் போன்று ரணி­லைத் தவிர்த்த மாற்­றுத் திட்­டம் என்ன என்றே அரச தலை­வ­ரும் தேடிச் செல்­வார் என்று எதிர்­பார்க்­க­லாம். சங்­கி­லித் தொடர்­போல இழு­பட்­டுச் செல்­லப்­போ­கும் இந்த அர­சி­யல் மோத­லில் சிங்­க­ளத் தரப்­பு­கள் ஈடு­பட்­டி­ருக்க அதில் அள­வு­க­டந்த அக்­க­றை­யு­ட­னும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் தமிழ்த் தரப்­பு­க­ளும் ஈடு­பாடு காட்­டு­வ­தற்­கான பிர­தி­ப­யன் ஏதும் கிடைக்­குமா? என்­பதே தமிழ் மக்­க­ளுக்கு முன்­னாள் உள்ள கேள்வி.

தெற்­கின் சிங்­கள, பௌத்த அர­சி­ய­லில் மகிந்த காத்­தி­ர­மான, தவிர்க்க முடி­யாத ஒரு தரப்பு என்­ப­தைத் தெளி­வாக உணர்ந்­தி­ருந்­த­போ­தும் இந்த அதி­கார மோத­லில் வலிந்து தமது தலை­யைக் கொண்டு சென்று நுழைக்­கும் தமி­ழர் தரப்­பி­னால், மகிந்த -– மைத்­திரி தரப்­பைப் புறந்­தள்­ளிய ஒரு தீர்­வைத் தமி­ழர்­க­ளுக்­குப் பெற்­றுத்­தர முடி­யுமா? ஒரு­வேளை அப்­படி ஒரு தீர்­வைப் பெற்­றுக் கொண்­டா­லும்­கூட அது நிரந்­த­ர­மா­ன­தாக இருக்­குமா?

மக்­க­ளாட்­சி­யைப் பாது­காப்­பது, முறை­யற்ற வழி­யி­லான ஆட்சி மாற்­றத்தை எதிர்ப்­பது என்­கிற முழக்­கங்­க­ளின் கீழே மட்­டுமே தமிழ் அர­சி­யல் தரப்­பின் நகர்­வு­கள் அமைந்­தி­ருக்­கின்­றன என்று நம்­பு­வ­தற்கு தமி­ழர்­கள் அர­சி­ய­ல­றி­வற்­ற­வர்­க­ளும் அல்­லர். ஏற்­க­னவே மைத்­திரி -– ரணில் தரப்பை முழு­தாக நம்­பிக் கள­மி­றங்­கிய புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் நட்­டாற்­றில் விடப்­பட்­டி­ருக்­கை­யில் தற்­போ­தைய நகர்­வு­க­ளின் பெறு­திக்­கும் பொறுப்­புச் சொல்­ல­வேண்­டி­ய­வர்­க­ளா­கத் தமிழ்த் தலை­வர்­கள் இருப்­பார்­கள் என்­பதை அவர்­கள் நினை­வில் கொள்­ளட்­டும்.

You might also like