ஏறாவூரில் தேடுதல்- குப்பையில் சிக்கிய பொருள்கள்!!

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 27 அரச திணைக்களங்களின் போலி இறப்பர் முத்திரைகள், பிரின்டர் , மடிக்கணினி மற்றும் ஆவணங்கள் மீட்கப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் குப்பையில்  வீசப்பட்டிருந்த ஒரு தொகுதி கூரிய கத்திகள் , வாள்கள் என்பன மீட்கப்பட்டன என்று ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுதீஸ் சத்துரங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது இவை மீட்கப்பட்டன.

You might also like