ஒரு வருடத்துக்கு மேலாக மின்சாரச் சிட்டை இல்லை!!

ஒரு வரு­டத்­துக்கு மேலாக மின்­சா­ரச் சிட்டை கிடைக்­க­வில்லை. மொத்­தப் பண­மாகச் செலுத்­து­வது சிர­மம். எனவே ஏனைய பகு­தி­க­ளைப் போன்று மாதாந்த அடிப்­ப­டை­யில் சிட்டை வழங்கி பணம் செலுத்த ஏற்­பாடு செய்து தரு­மாறு துணுக்­காய் பிர­தேச மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

புதி­தாக மின்­சா­ரம் வழங்­கப்­பட்டு ஒரு வரு­டத்­துக்கு மேல் கடந்­தும் அதற்­கான கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­கள் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. துணுக்­காய் பிர­தே­சத்­துக்­குட்­பட்ட கோட்­டை­கட்­டி­ய­கு­ளம், அம்­ப­லப்­பொ­மாள்­கு­ளம் ஆகிய கிரா­மங்­க­ ளுக்கே கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­னர் மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டது.

எனி­னும் நீண்ட கால­மா­கக் கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. உரிய காலம் கடந்து கொடுப்­ப­ன­வுச் சிட்டை வழங்­கப்­பட்­டால் அதற்­கான மொத்­தப்­ப­ணம் வட்­டி­யில்­லா­மல் உரிய காலத்­துக்கு ஏற்ப வகுக்­கப்­பட்டு அற­வி­டப்­ப­டும்.

இத­னால் மேல­திக பணம் செலுத்த வேண்­டிய தேவை இல்லை. இருப்­பி­னும் மேற்­படி இரண்டு கிரா­மங்­க­ளும் விவ­சா­யத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அதி­கஸ்­டப் பகு­தி­க­ளா­கும். ஒரே தட­வை­யில் நிறைந்த பணம் செலுத்­து­வது கடி­ன­மா­ன­தா­கும்.

எனவே இந்­தக் கொடுப்­ப­ன­வுச் சிட்­டை­களை ஏனைய பகு­தி­க­ளைப் போன்று உரிய காலங்­க­ளில் வழங்கி பகுதி பகு­தி­யாக கொடுப்­ப­னவை மேற்­கொள்ள நட­வ­டிக்கை செய்து உத­வு­மாறு மக்­கள் இலங்கை மின்­சார சபை­யைக் கோரு­கின்­ற­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close