ஒரே நாளில் வசூலில் சாதனை படைத்த சர்கார்!!

0 841

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல், காலா மற்றும் பாகுபலி படத்தை விட அதிகமாகப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் அரசியல் சூழ்நிலையை பற்றியும், கள்ள வாக்கு பற்றியும் சமூக அக்கறையுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த வசூல் ரஜினியின் காலா, பிரம்மாண்ட படமான பாகுபலியை முறியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடித்த தெறி, மெர்சல் படங்களின் வசூலையும் மிஞ்சியிருக்கிறது.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, பழ கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

You might also like