கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வயலுக்குள் பாய்ந்தது!!

கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.

இந்தச் சம்பவம்  அம்பாறை பொத்துவில் றொட்டை வயல் பிரதேசத்தில் நடந்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்து அக்கரைப்பற்று நகருக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பொத்துவில் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்த வேளை வீதியை விட்டு விலகி வயலுக்குள் பாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like