side Add

கட்டுவனில் பகல் கொள்ளை- ரூ.25 ஆயிரம் பணத்தை இழந்த பெண்!!

பெண் ஒருவர் சைக்கிளில் முன்கூடையில் கைப்பையை வைத்துக் கொண்டு செல்வதை அவதானித்த இருவர் பின் தொடர்ந்து சென்று பையைப் பறித்துச் சென்றனர்.

இதனால் வங்கியில் இருந்து எடுத்து வந்த 25 ஆயிரம் ரூபா பணத்தை குறித்த பெண் இழந்தார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் நடந்துள்ளது.

கட்டுவன் பகுதியில் வசிக்கும் பெண், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து கைப்பையில் வைத்து கொண்டு வீடு நோக்கிச் சைக்கிளில் சென்றார்.

அவரது பணப் பை சைக்கிளின் முன்னாள் பொருத்தப்பட்டிருந்த கூடையில் இருந்துள்ளது. இதனை அவதானித்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

அவர்கள் எவரும் அற்ற பிரதேசத்தில் பணப்பையைத் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.

பணத்தை இழந்த பெண் சம்மவம் தொடர்பில், தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

You might also like