காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் நாளை மன்னாரில் !!

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆரம்ப கட்ட செயற்பாடுகள் மன்னாரில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

மன்னாரிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்திப்பதுடன், அவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் பற்றி விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஆலோசனை பரிமாற்றச் செயற்பாடுகளை மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் நாளைபொதுமக்களையும், சிவில் அமைப்புக்களையும் சந்திப்பதோடு, அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பிலும்
கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close