கால்­ந­டை­க­ளுக்குக் காப்­ப­றுதி

கமத்­தொ­ழில் மற்­றும் கம­நல காப்­பு­று­திச் சபை­யி­னால் கால்­ந­டை­க­ளுக்­கான காப்­பு­று­தி­கள் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக சபை­யின் உத­விப் பணிப்­பா­ளர் து.கிரி­த­ரன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
கால்­நடை வளர்ப்­பில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளின் நலன்­க­ருதி தற்­பொ­ழுது மாடு­க­ளுக்­கான காப்­பு­று­தி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

அதன்­படி காப்­பு­று­திப் பண­மாக வரு­டம் ஒன்­றுக்கு ஒரு மாட்­டின் பெறு­ம­தி­யின் 3 வீதத்­தினை செலுத்த வேண்­டும். அவ்­வாறு செலுத்தி மாடு­களை காப்­பு­றுதி செய்­வ­தன்­மூ­லம் பல நன்­மை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

காப்­பு­றுதி செய்­தி­ருப்­பின் மாடு­க­ளுக்கு ஏதா­வது பாதிப்பு ஏற்­ப­டின் அதன் பெறு­ம­தி­யின் 85 வீதத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

காப்­பு­றுதி தொடர்­பான விவ­ரங்­களை அறிய திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள கமத்­தொ­ழில் மற்­றும் கம­நல காப்­பு­றுதி சபை­யு­டன் நேர­டி­யாவோ அல்­லது 0212227105 என்ற தொலை­பேசி இலக்­கத்­து­டனோ தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்ள முடி­யும் – என்­றார்.

You might also like