side Add

கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப் புலி அட்டகாசம்- அடித்துக் கொன்ற மக்கள்!!

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்துக்குள் இன்று புகுந்த சிறுத்தைப் புலி வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட 10 பேரை தாக்கி காயப்படுதியது. அதனைப் பொது மக்களால் அடித்துக் கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்துக்குப் பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆள்களற்ற காணிக்குள் உட்புகுந்த சிறுத்தை, மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.

அங்கு வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகை தந்தனர். இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

பின்னர் கிராம மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து சிறுத்தைப் புலியைத் தேடி, அதனைக் கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like