கிறிஸ்ரி குகராஜாவின் நினைவு தினம்!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) 20 ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் அவரது திரு உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து. மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செய்யபட்டது.

நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செ,மயூறன், பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like