குப்பைகளால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் காட்சிக்கு!!

கனடா டொரண்டோ விலங்கியல் பூங்காவில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.

அதில், கடலில் வீசப்படும் பிளாஸ்ரிக் குப்பைகளை கொண்டு கடல்வாழ் உயிரினங்களை கலைஞர்கள் வடிவமைத்து பொதுமக்களின் காட்சிக்கு வைத்தனர்.

கடலில் வீசப்படும் குப்பைகளால் எந்த அளவு கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like