கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு!!

கூட்டுறவுப் பெரியார் வீ.வீரசிங்கத்தின் 54 ஆவது நினைவு தினம், யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவுச் சபைத் தலைவர் தி.சுந்தரலிங்கம் தலைமையில் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் ந.திருலிங்கநாதன், யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் செல்வி. பரீன்ஷஸ்ஸானா அப்துல் சமீயூ, செஞ்சொற்செல்வர் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் மற்றும் கூட்டுறவாளர்கள், யாழ்.மாவட்ட சிக்கன கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வீரசிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு சி.க.கூ.சங்கங்களிடையே நடாத்தப்பட்ட கூட்டுறவு போட்டியில் வெற்றி பெற்ற முதலாம் இரண்டாம் மூன்றாம் இடத்தைப் பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

57 கூட்டுறவாளர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

You might also like