கைதடி ஸ்ரீ கௌரி அம்மன் ஆலயத்துக்கு அடிக்கல்!!

யாழ்ப்பாணம் கைதடி ஸ்ரீ கௌரி அம்மன் ஆலயத்துக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது.

சிவசிறி பஞ்சலிங்கம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வேப்பம் குளம் வவுனியா பத்திரகாளி அம்மன் சாமியம்மா, மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலய குரு முதல்வர் , வண்னை கலட்டி வீரகத்திப் பிள்ளையார் ஆலய சிவசிறி விவேகானந்தக் குருக்கள் , இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை ஆணையாளர் வை. மோகனதாஸ், உதவி ஆணையாளர் பொ. யோகேஸ்வரா, பிரதேச சபை உறுப்பினர், ஓய்வுபெற்ற யாழ் தபால் ஊழியர் தவகுலநாதன்,ஆலய தலைவர் பஞ்சலிங்கம், செயலாளர் ப.ஈஸ்வரி, பொருளாளர் செல்வி சிவகௌரி மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

You might also like