கொழும்பு நகர கரையோர பூங்கா திறப்பு!

கொழும்பு நகர வாவிக் கரையோரக் காட்சிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பேரை வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பூங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் இன்று மக்கள் பாவனைக்குத் திறக்கப்பட்டது.

கொழும்பு நகரை அண்டிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரை வாவியின் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு அரச தலைவர் இதன்போது உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மகிந்த சமரசிங்ஹ, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close