சட்ட ரீதியாகவே செயற்படுகிறார் ஜனாதிபதி – அமைச்சர் பைஸர்!!

0 75

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பு விரோதமான செயற்படுவதாக தவறான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியமை, புதிய பிரதமர் நியமனம் என்பன சட்ட ரீதியானவை. அரசமைப்புக்கு அமைய செயற்படுமாறு சபாநாயகர் கருஜயசூரியவை கேட்டுக்கொள்கின்றேன். அரசமைப்பின் படி புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஊடாக அவரை சட்ட ரீதியாக நீக்க முடியும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like