சற்றுமுன்னர் கோரவிபத்து- தொடருந்து மோதி இராணுவத்தினர் உயிரிழப்பு!!

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் இராணுவத்தினர் நால்வர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி தொடருந்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து நடந்துள்ளது.

மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like