சவுதியில் நிரந்தர குடியுரிமை- 8 லட்சம் றியால் கட்டணம்!!

சவுதி அரேபியா வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கான சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற 8 லட்சம் றியால்களை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

அதே போன்று ஓராண்டுக்கு மாத்திரம் சவுதி அரேபியாவில் வசிக்க, 1 லட்சம் றியால் கட்டணம் செலுத்த வேண்டும். அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய விண்ணப்ப பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக குடியுரிமை பெறாமல் வசிப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்ய முயற்சிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like