சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில்- மூன்று மாடிக் கட்டத்துக்கு அடிக்கல்!!

மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியில் மூன்று மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது.

விஷேட கல்வி அலகின் மூலம் அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் செயற்திட்டத்தில் மத்திய கல்வி அமைச்சின் நிதியில் அமைக்கப்படவுள்ள கட்டடத்துக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் அடிக்கல் நடப்பட்ட்து.

கல்லூரி அதிபர் த.தனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன், வட மாகான கல்வி அலுவலர்கள், மன்னார் வலய கல்வி பணிப்பாளர் ஜே.பிரட்லி, திருக்கேதீஸ்வரம் திருப்பணிச்சபை செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன், இந்து மகாசபை தலைவர் பிருந்தாவனம், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்தியர் கதிர்காமநாதன் மற்றும் சமூக சமய பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like