சிறுத்தையின் உடல் மீட்பு!!

திம்புள்ள பத்தனை ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை உயிரிழந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன.

தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுத்தை வனவிலங்கு அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You might also like