சிறுவனுக்கு சாவுத் தண்டனை விதித்தது சவுதி!!

சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக 18 வயது சிறுவனுக்கு சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதியைச் சேர்ந்த முர்டரா குரேரிஸ் என்ற சிறுவன், கடந்த 2011 ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டான்.

2014 ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் பஹ்ரைன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, முர்டரா குரேரிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட முர்டரா விசாரணை என்கிற பெயரில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். அந்த சமயத்தில் குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டால் விடுவிப்பதாக முர்டராவிடம் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னர் மே மாதம் 2017 ஆம் ஆண்டில் 16 வயது நடந்து கொண்டிருந்த போதே அல்-தபாமில் உள்ள அல்-மாபாத் சிறைக்கு மாற்றப்பட்டான்.

இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் 37 பேருடன் சேர்ந்து, முர்டராவுக்கும் சாவுத் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

You might also like